விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர்*  ஆதி நடு அந்திவாய்,*
    வாய்ந்த மலர் தூவி வைகலும்,*  - ஏய்ந்த-
    பிறைக் கோட்டுச் செங்கண் * கரி விடுத்த பெம்மான்* 
    இறைக்கு ஆட்படத் துணிந்த யான்.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறை ஏய்ந்த கோடு – சந்திரகலை போன்ற தந்தரத்தையும்
செம் கண் – சிவந்த கண்களையுமுடைய
கரி – கஜேந்திராழ்வானை
விடுத்த – முதலைவாயில் நினறு விடுவித்தருளின
பெம்மான் – ஸர்வேச்வரனான

விளக்க உரை

உரை:1

எம்பெருமான் ஸ்ரீக்ஜேந்திராழ்வான் திறத்தில் வெளியிட்டருளின. அநுக்ரஹத்தை நோக்கின பின்பு, நாமும் அந்த கஜேந்திரனைப்போலே அடிமை செய்வோமாயின் அப்படிப்பட்ட பகவதநுகரஹத்திற்கு நாமும் பாத்திரமாகலாமன்றோ பென்று சூடு எப்பொதும் புஷ்பங்களை எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிப்பதும் அவனுடைய ஸஹஸ்ரபோக்கைச் சொல்லிக் அதுநுஸந்திப்பதுமாயிராதியன்றேனென்று தம்முடைய போதுபொக்கைச் சொல்லிக் கொண்டாராயிற்று. “ஆதி நடு அந்திவாய்“ என்று மூன்று காலங்களை யெடுத்துரைத்தது எல்லாக்காலங்களிலு மென்றபடி.

உரை:2

பிறைச்சந்திரன் போன்ற தந்தத்தையும் சிவந்த கண்களையும் உடைய கஜேந்திரனை முதலையிடமிருந்து விடுவித்தருளிய இறைவனுக்கு அடிமை செய்ய அடியேன் உறுதி கொண்டேன்

English Translation

The Lord who destroyed the red-eyed tusker is my master. I am prepared to serve him. I shall collect flowers thrice a day, and patiently recite the thousand names of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்