விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டேன் திருமேனி*  யான் கனவில்,*  ஆங்கு அவன் கைக்-
    கண்டேன்*  கனலும் சுடர் ஆழி கண்டேன்* 
    உறு நோய் வினை இரண்டும்*  ஓட்டுவித்து,*  பின்னும்- 
    மறு நோய் செறுவான் வலி.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யான் – அடியேன்
கனவில் – ஸவப்நம்போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி – திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன் – ஸேவிக்கப்பெற்றேன்
ஆங்கு – அப்போது
 

விளக்க உரை

கீழ்பாட்டில் ஆழவார் தம் திருவுள்ளத்திற்கு ஸம்ஸாரதோஸஷ்களை எடுத்துரைக்கக்கண்ட எம்பெருமான் 1. “எம்மாவீட்டுத்திறமும் செப்பம்“ என்றும், 2. “இச்சுவைதவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேணடேன் அரங்கமாநகருளானே!“ என்றும். 3. “என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே“ என்றும் 4. வைகுண்டவாஸேபி நமேபிலாஷ“ என்றும் ஞானிகள் பேசாநிற்க. இவர் இந்நிலத்தை இப்படி இகழ்கிறாரே, நம்முடைய அநுபவம் இவர்க்கு இங்கு நன்கு வாய்த்ததாகில் இவர் இந்நிலத்தை இகழ்ந்து பரமபதத்தை ஒரு பொருளாக விரும்பமாட்டார் – என்றெண்ணி, தன்னுடைய திவ்யாமங்கள விக்ரஷேஸேவையை விலக்ஷணமாகப் பண்ணிக்கொடுக்க ஷேவித்து ஆநந்தம் பொலிப்பேசும் பாசுரம் இது. ப்ரதயக்ஷ ஸமாநாகாரமான மாநஸ ஸாக்ஷாத்காரத்தைக் கனவு என்கிறது. “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழுமருக்கனணி நிறமுங்கண்டேன் – செருக்கிவரும், பொன்னாழிகண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன். என்னாழிவண்ணன் வாலின்று“ என்ற பேயார் பாசுரத்தின் பொருளை முன்னிரண்ட்டிகளில் அடக்கிப் பேசினாபோது மிவ்வாழ்வார்.

English Translation

I saw a beautiful form in my dream and in it I saw him wielding a radiant discus in his hand. He rid me of my good and bad deeds and ensured my passage without return. I saw in this his power too.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்