விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப் போனேன்*  வருமளவு இப்பால்* 
    வன் பாரச் சகடம் இறச் சாடி*  வடக்கில் அகம் புக்கு இருந்து*
    மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை*  வேற்றுருவம் செய்து வைத்த* 
    அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மஞ்சனம் ஆட்டி - (உன்னைத்) திருமஞ்சனம் செய்வித்து;
அமுது ஊட்டி - (அதன் பிறகு) அமுது செய்யவும் பண்ணிவிட்டு;
போனேன் - (யமுனைநீராடப்) போன நான்;
வரும் அளவு இப்பால் - (மீண்டு) வருவதற்குள்ளே;
வல் - வலிவுள்ளதும்;

விளக்க உரை

நான் ஒருநாள் உனக்குத் திருமஞ்சனஞ்செய்து அமுதூட்டி உன்னைத்தொட்டிலில் தூங்கவிட்டு யமுனையில் தீர்த்தமாடப்போக, அப்போது, முலைப்பாலுக்காகக் குழந்தைகள் அழுவதைப்போலே காலைத்தூக்கி புதைத்து வலிய சகடத்தை முறித்துத் தள்ளினாய்; அன்றியும், மற்றொருகால் அவ்விளம்பிராயத்திலேயே ஒரு கன்னிகையை ஸம்போக சின்னங்களால் உருவம் மாரும்படியும் செய்திட்டாய்; இப்படி மனிதரால் செய்யலாகாத செயல்களைச் செய்வதனால் ‘இவன் நம்மோடு சேர்ந்தவனல்லன்; நம்மிலும் வேறுபட்ட கடவுள்’ என்று உன்னைத் தெரிந்து கொண்டேன்; ஆன பின்பு உனக்கு அம்மந்தர அஞ்சுவேன் என்கிறாள். நன்றாக நீராட்டினேன் என்றபொருளில் பொன்போல் நீராட்டினேனென்பது ஒருவகை மரபு. “ஈடும் வலியுமுடைய இந்நம்பி பிறந்த வெழுதிங்களில், ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப்போனேன், சேடன் திருமறுமார்வன் கிடந்து திருவடியால் மலைபோல், ஓடுஞ்சகடத்தைச் சாடியபின்னை உரப்புவதஞ்சுவனே” என்ற பெரியதிருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டை ஒருபுடை ஒப்பிடுக. போனேன் -வினையாலணையும் பெயர்; வினைமுற்றுஅன்று. அன்பா=எதைக் கண்டாலும் அதன் மேல்விழும்படியான விருப்பமுடையவனே! என்கை. வேற்றுவஞ் செய்துவைக்கையாவது “கண்மலர் சோர்ந்து முலைவந்துவிம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப, என் மகள் வண்ணமிருக்கின்றவா நங்காய்! என்செய்கேன் என்செய்கேனோ”” என்ற பாசுரத்திற் பகர்ந்தபடி பண்ணுகை.

English Translation

I bathed and fed you, left you here and went. Before I returned you smote and overturned a loaded cart then went into the Northern room and disfigured a thin-waisted dame. O dear! I know you now, I fear to give you suck.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்