விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நினைப்பன் திருமாலை*  நீண்ட தோள் காண,* 
    நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார்,*  - மனைப்பால்-
    பிறந்தார் பிறந்து எய்தும்*  பேரின்பம் எல்லாம்,*
    துறந்தார் தொழுதார் அத் தோள்.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருமாலை - லக்ஷ்மீநாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பான் - (அவனது) சிறந்த திருத்தோள்  களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார் - இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார் - ஒருவகை யோனிப் பிறப்பையும் அடையமாட்டார்கள்
அத்தோள் - அந்தத் திருத்தோள்களை

விளக்க உரை

ஸம்ஸார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்களே பிறவிகளை அடியறுக்கவல்லவரென்கிறார். திருமாலை நீண்டதோள்காண நினைப்பன் – ஐச்வரிய மளிக்கவேணுமென்றும் ஸந்தான மளிக்கவேணுமென்றும் பலபல கோரிக்கைகளை முன்னிட்டு எம்பெருமானைப் பலர் அடிபணிவ ராகிலும் நான் அப்படி ஒரு கோரிக்கையும் கருதினவனல்லேன், “தோள் கண்டார் தோளே கண்டார்“ என்னும் படியான அவனது தோளழகை ஸேவிக்கப்பெற வேணுமென்பது தவிர வேறோராசையும் எனக்கில்லை என்றவாறு, இப்படி எம்பெருமானுடைய திவ்யாவயவத்தை ஸ்லயம் போக்யமாக நினைப்பவர்கள் “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்பு மிந்நின்ற நீர்மை இனியாமுறாமை“ என்று ஆழ்வார் பிரார்த்தித்த பிறப்பின்மையைப் பெற்று நித்ய முக்தராய் வாழ்ந்திடுவர்.

English Translation

The Lord is Tirumal, whom I contemplate. Those who contemplate him are freed of further birth. The realsied souls who do take birth in this world sacrifice all household pleasures and worship him alone.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்