விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எமக்கு என்று இரு நிதியம்*  ஏமாந்து இராதே,* 
    தமக்கு என்றும் சார்வம் அறிந்து,*  - நமக்கு என்றும்-
    மாதவனே என்னும்*  மனம் படைத்து*  மற்று அவன் பேர்-
    ஓதுவதே*  நாவினால் ஓத்து.             

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எமக்கு என்று - தங்களுடையதாக நினைத்து
ஏமாந்து இராதே - மனச்செருக்குக் கொண்டிராமல்
தமக்கு என்றும் சார்வம்  அறிந்து - தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தையறிந்து
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து - ‘நமக்கு எக்காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று துணிந்திருக்கும் நெஞ்சையுடையராய்
மற்று - அதற்குப்பின்பு

விளக்க உரை

உலகத்தில் தனவான்களென்று பேர் படைத்துள்ள பலர் ‘நமக்கு ஏராளமான செல்வமிருக்கும்போது என்ன குறை- இதுவே நமக்கு ஆபத்பந்து’ என்றெண்ணி எம்பெருமானை நெஞ்சிலும் நினையாதே பணத்தையே தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டு காலங்கழிப்பதுண்டே; அன்னவர்களுடைய நெஞ்சிலே உறுத்தும்படி இப்பாசுர மருளிச்செய்கிறார். 1. ‘ஒரு நாயகமாய் ஓட வுலகுடனாண்டவர், கருநாய் கவர்ந்த காலர் சிதைகியபானையர் பெருநாடுகாண இம்மையிதே பிச்சைதாங் கொள்வர்” என்று தொடங்கிப் பல பாசுரங்களிலே நம்மாழ்வாரருளிச் செய்த செல்வ நிலையாமையை இவர் ஓரடியால் சுருங்க வருளிச் செய்தனரென்க. இடத்தைவிட்டுச் செல்வதையே இயல்வாகவுடையதாதல் பற்றியே ஸம்பத்துக்குச் செல்வமென்று பெயரிடப்பட்டதாதலால் இப்படி நிலையற்றதான செல்வத்தை நம்பிச் செருக்குக் கொண்டிராதே ‘எப்போதும் ஸ்திரமாயிருக்கக்கூடிய பற்றுக்கோடு எது?’ என்று ஆராய்ந்து பார்த்து ‘திருமகள் கொழுநனான எம்பெருமானே நமக்கு என்றும் சார்வம்’ என்கிற தெளிவுபெற்று அவனுடைய திருநாமங்களை ஓதுவதே உறும் - என்றாராயிற்று. நிதியம் = ‘நிதி’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்று வந்துள்ளது. இரு நிதி - பெருத்தநிதி. ஏமாத்தல் - களித்தல். சார்வம் - ‘சார்வு’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்றது.

English Translation

Cultivating a heart that recalls the glories of the Lord, always considering Madava the great wealth and sole refuge, let your tongue learn to recite his names and become learned.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்