விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மற்று ஆர் இயல் ஆவார்*  வானவர் கோன் மா மலரோன் ,*
    சுற்றும் வணங்கும் தொழிலானை,*  - ஒற்றைப்-
    பிறை இருந்த*  செஞ்சடையான் பின் சென்று,*  மாலைக்-
    குறை இரந்து தான் முடித்தான் கொண்டு?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாலை - எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான் - ஓருகலாமாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின்சென்று - அநுவர்த்தித்து
இரந்து - (பல்லைக்காட்டி) யாசித்து
குறை - தனது குறையை

விளக்க உரை

கீழ்ப்பாட்டிற் கூறியபடி உபாயோபேயங்களிரண்டும் தானேயாயிருக்கிற எம்பெருமானே. ஆச்ரயணீயன்; அவனைத் தவிர்த்து மற்றையோரை ஆச்ரயித்தால் நம்மை அடிமைகொள்ள வல்ல சக்தி அவர்களுக்கில்லாமையாலும், ஆச்ரயணீயரென்று ஸாமாந்யர் பிரமிக்கக்கூடிய சில்லரைத் தெய்வங்களும் ஸ்ரீமந் நாராயணனை அடிபணிந்தே தம்தம் குறைகளைத் தீர்த்துக்கொள்ளக் காண்கையாலும் அப்பரமபுருஷனே ஆச்ரயிக்கவுரியன் என்றாராயிற்று. முப்பத்து முக்கோடி தேவர்கட்குத் தலைவனான இந்திரனும், திருமாலினது திருநாபிக் கமலத்தை வாழிடமாகவுமுடைய பிரமனும் நேராக நின்று கிட்டமாட்டாமையாலே சுற்றுப் பக்கங்களில் நின்றாகிலும் தம்முடைய அபிமாநம் நீங்கி எம்பெருமானை ஆச்ரயிக்கும்படியைக் கூறுவன முன்னடிகள். பக்கங்களிலே நிற்கவாவது தைரியமுண்டாயிற்று இந்திரற்கும் பிரமற்கும் அவ்வளவும் தைரியமில்லாத சிவபிரான் பின்புறத்திலே சென்று நின்றுகொண்டு யாசித்துத் தன் குறையை (ப்ரஹ்ம ஹத்யாசாப் நிவ்ருத்தி முதலியவற்றை)த் தீர்த்துக்கொள்ளும்படியைக் கூறுவன பின்னடிகள். தக்ஷமுனிவனது சாபத்தால் க்ஷயமடைபவனாய்க் கலை குறைந்துவந்து சரணமடைந்த சந்திரனை, சிவபிரான் முடியின் மீது கொண்டு வரமளித்துப் பாதுகாத்ததனால் ஒற்றைப் பிறையணிந்த செஞ்சடையான் எனப்பட்டான்.

English Translation

The raincloud-hued lord Tirumal is worshipped by indra and Brahma. Siva too followed him and kprayed, when the lord fulfilled his petition and rid him of his sin. Who else is capable of such grace?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்