விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆய்ச்சியர் சேரி*  அளை தயிர் பால் உண்டு*
    பேர்த்து அவர் கண்டு பிடிக்கப்*  பிடியுண்டு* 
    வேய்த் தடந்தோளினார்*  வெண்ணெய் கோள் மாட்டாது*
    அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்* 
     அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அளை - (மத்தை நாட்டி) உடைத்த;
தயிர் - தயிரையும்;
பால் - (காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும்;
உண்டு - அமுது செய்து;

விளக்க உரை

’பழநாளைத்திருடன் ஒருநாளைக் ககப்படுவான்’ என்னும் பழமொழியை இரண்டாமடியில் நினைக்க. ஆலைத்தயிர்-தன் ஆவலின் அளவுக்கேற்ப தடாவினில் தன் கையில் உள்ள போகவிட்டு அளைகைக்கு உரிய தயிர் என்னவுமாம். வேய்ந்தடந்தோளினார்-ஸர்வசக்தனான ஸர்வேச்வரனுக்கு இடைச்சிகள் கையில் பிடியுண்டு ஆப்புன்னகையைத் தப்பிப்போதல் அரிதன்றே யாயினும் அங்ஙன் தப்பிப்போகாமல், அவர்கள் படுத்தின பாட்டுக்கெல்லாம் இசைத்திருந்தது அவ்விடைச்சிகளின் வேய்ந்தடந் தோளினழகைக் கண்டு கொண்டிருக்கைக்காகவென்க. கொள்மாட்டாது-கொள்ளமாட்டாது; கொள்-முதனிலை.

English Translation

He gobbled the village cowherd women’s milk and curds; was caught red handed, and prevented from stealing butter by being bound in the homes of maids with beautiful arms. Today we are finished,--by the lord who wept as he was beaten,--O, We are finished.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்