விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெயரும் கருங்கடலே நோக்கும்ஆறு,*  ஒண்பூ-
    உயரும்*  கதிரவனே நோக்கும்,*  உயிரும்-
    தருமனையே நோக்கும்*  ஒண்தாமரையாள் கேள்வன்,*
    ஒருவனையே நோக்கும் உணர்வு   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒண் பூ - அழகிய தாமரைப் பூவானது
உயரும் - உந்ததஸ்தநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற
கதிரவனே - ஸூர்யனையே
நோக்கும் - கண்டுமலரும்;
உயிரும் - பிராணனும்

விளக்க உரை

பிள்ளைலோகாசர்யாருளிச்செய்த முமுக்ஷுப்படியில் திருமந்தரப்ரகரனத்தில் 73 “ இத்தால்- *தாமரையாள் கேள்வ நொருவனையே நோக்கு முணர்வு என்றதாயிற்று” என்னும் ஸூத்ரத்திற்கு மணவாளமாமுனிகளருளிச்செய்துள்ள வியாக்கியான சைலியை நோக்குங்கால், இப்பாட்டில் உணர்வு என்பது ஜ்ஞாநமயனான ஆத்மா என்று பொருள்படிகிறதென்று கொண்டு,ஜ்ஞாநைக நிரூபணீயனான ஆத்மா திருமாலுக்கு அநந்யார்ஹ சேஷபூதனென்பதை இப்பாட்டு உணர்த்துவதாகக் கருத்துக்கொள்ளவும் இடமேற்படுகின்றது; அதுவும் ஒரு நிர்வாஹமாகும். இப்பாட்டால் மூன்றுவகையான சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன்; 1. எம்பெருமானைப்பற்றி யுண்டாகிற ஞானமே ஞானம் . 2. ஆத்மா எம்பெருமானுக்கே உரியவன். 3. ( தாமரையாள் கேள்வனென்று பிராட்டி ஸ்ம்பந்தம் தோற்றச் சொல்லியிருக்கையாலே) மிதுநசேஷத்வமே ஜீவாத்மலக்ஷணம் – என்னு மிப்பொருள்கள் மூன்ருமாம். “உயிரும் தருமனையே நோக்கும் “ என்றவிடத்தில் ஒரு விசாரமுண்டு: அவைஷ்ணவர்களுடைய பிராணன் யமதர்மராஜனுக்கு வசப்படுமேயன்றி ஸ்ரீவைஷ்ணவர்களின் பிராணான் அப்படி யமனைசென்று கிட்டமாட்டாதே; அப்படியிருக்க, “ உயிரும் தருமனையே நோக்கும்” என்றுபொதுவாக எப்படி அருளிச்செய்யலாம்? என்று. இதற்கு அப்பிள்ளையுரையில் “ உயிரும்-பகவத்பரரல்லாத நாட்டிற் பிராணிகளடங்கலும்” என்றுரைத்திருக்கக் காண்கையாலே இந்த சங்கை வேண்டா என்பர் சிலர். வைஷ்ணவர்களானாலும் சரி, அவைஷ்ணவர்களானாலும் சரி; எல்லாருடைய பிராணனும் பகவதாஜ்ஞையின் படி யமதர்ம ராஜனிடத்திலேயே சென்று சேரும்; ஸித்தாந்தத்தில் ஆத்மா’ வேறு, பிராணன் வேறு; வைஷ்ணவாத்மா எம்பெருமானைச் சென்று சேர்ந்தாலும் அவனுடைய பிராணன் யமனைத்தான் சென்று சேரும் என்பர் சிலர். மற்றுஞ் சிலர். 3. “ யமோவைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹருதி ஸ்தித” என்றும் “ க்ருஷ்ணம் தர்ம்ம் ஸநாதநம்” என்றும் எம்பெருமானையே யமனாகவுஞ் சொல்லியிருக்கையாலே “ உயிரும் ‘தருமனையே நோக்கு” மென்கிற விவ்விடத்திற்கும் அவ்வெம்பெருமானே பொருள் என்பர். நிற்க.

English Translation

The ocean is the final destination that all rivers run into. The lotus blossoms turn to the rising sun. All living beings fall to the lord of death, The Lord of lotus-dame lakshmi alone is the goal of realisation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்