விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடைந்த அருவினையோடு*  அல்லல்நோய் பாவம்,*
    மிடைந்தவை மீண்டுஒழிய வேண்டில்,* - நுடங்குஇடையை-
    முன்இலங்கை வைத்தான்*  முரண்அழிய,*  முன்ஒருநாள்- 
    தன்வில் அங்கை வைத்தான் சரண். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடைந்த - அடியே பிடித்துப் பற்றிக்கிடக்கிற
அரு - போக்குவதற்கு அருமையான
வினையோடு - பழவினைகளும்
அல்லல் - (அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத்துன்பங்களும்
நோய் - சரீரவியாதிகளும்

விளக்க உரை

நாம் நல்ல வழியிற் போதுபோக்கவேணுமானால் பகவானை ஆச்ரயிப்போம்; அப்படி அவனை ஆச்ரயிக்குமிடத்து ஆச்ரயிக்க வொட்டாமல் இடையூறாக அருவினை அல்லல்நோய் பாவம் முதலியவை குறுக்கே நிற்கின்றனவே! அவற்றைப் போக்கும்வழி யாது? என்று சங்கை பிறக்க, நமது பிரதிபந்தநங்களை இருதுண்டமாக்குவதற்கு உபாயமாக ஸ்ரீராமபிரானைச் சரணம்புகுதல் நன்று என்கிறார். இத்தால், எம்பெருமானுக்கு போக்யமாயிருந்துள்ள ஆத்மவஸ்துவை என்னுடைய தென்று செருக்குற்றிருக்குமவர்கள் ராவணாதிகள் பட்டது படுவாரென்னுமிடமும், இவ்வாத்வைஸ்து அவனுடையது’ என்று அநுகூலித்திருக்குமவர்களுக்கு வரும் விரோதகளை அப்பெருமான் பிராட்டியின் துயரத்தைப் பரிஹரித்ததுபோலே பரிஹரித்தருள்வனென்னும்மிடமும் தெரிவிக்கப்பட்டனவாம்.

English Translation

Attain the Lord our refuge, -who in the yore wielded his bow on the Lanka king for abducting his slender-waisted ska, -If you wish toberidofthesins, miseries, sicknesses, and karma of the past permanently.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்