விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொழுது மலர்கொண்டு*  தூபம்கை ஏந்தி,* 
    எழுதும் எழுவாழி நெஞ்சே,* - பழுதுஇன்றி-
    மந்திரங்கள் கற்பனவும்*  மால்அடியே கைதொழுவான்,* 
    அந்தரம் ஒன்றுஇல்லை அடை.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கை ஏந்தி - கையிலே ஏந்திக் கொண்டும்.
தொழுது - (எம்பெருமானை ) வணங்கி
எழுதும் - உஜ்ஜீவிப்போம்;
எழு - நீ புறப்படு;
வாழி - (உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:

விளக்க உரை

நெஞ்சே! நாம் பகவத் விஷயத்தை விட்டு ஒரு நொடிப்பொழுதும் ஆறியிருக்கவழியில்லை; நாம் குருகுலவாஸம் பண்ணி மந்த்ரங்களை அப்யஸிப்பதெல்லாம் எம்பெருமானை அடிபணிவதற்கேயன்றி வேறொரு பிரயோஜனத்திற்காக வன்றே; ஆனபின்பு, தூபதீபபுஷ்பாதிகளான உபகரணங்களைக் கையிற்கொண்டு அப்பெருமானை ஆராதிக்கச் செல்வோம். எழுந்திரு; இனிநாம் தாமஸித்திருப்பதற்கு அவகாசமேயில்லை – என்று தம் திருவுள்ளத்தை த்வரைப்படுத்துகிறார். “மலர் கொண்டு தூபம்கையேந்தி- தொழுது எழுதும் எழு” என்று ஆழ்வார் சொன்னவுடனே நெஞ்சு மிகவும் அதற்கு அநுகூலப்பட்டிருக்கவே “வாழி நெஞ்சே” என்று உவப்பினால் மங்களாசாஸநம் செய்தாரென்க; இந்த ஆநுகூல்யம் உனக்கு ஒருநாளும் மாறாதிருக்க வேணுமென்றவாறு. பழுது இன்றி = குருகுலவாஸம் செய்யாமல் மந்த்ரங்களைக் கற்பது பழுது; அப்படிப்பட்ட பழுது இல்லாமல் [குருகுலவாஸம் பண்ணி] என்றபடி. அந்தரம் ஒன்று இல்லை –’பிறகு பார்த்துக்கொள்வோம்’ என்று ஆறியிருக்க அவகாசம் சிறிதுமில்லை.

English Translation

Offering worship with freshly culled flowers, and incense, -O Heart of mine!, -arise, awake and succeed. All the Mantras learnt without a fault are for the worship of the adorable Lord. Do not tarry, attain him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்