விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வகைஅறு நுண்கேள்வி வாய்வார்கள்,*  நாளும்- 
    புகைவிளக்கும்*  பூம்புனலும் ஏந்தி,*  - திசைதிசையின்-
    வேதியர்கள்*  சென்றுஇறைஞ்சும் வேங்கடமே,*  வெண்சங்கம்- 
    ஊதியவாய்*  மால்உகந்த ஊர்       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேதியர்கள் - வைதிகர்கள்
நாளும் - நித்தியமும்
புகை விளக்கும் - தூபதீபங்களையும்
பூ புனலும் - புஷ்பங்களையும் தீர்த்தத்தையும்
ஏந்தி - தரித்துக்கொண்டு
 

விளக்க உரை

மூன்று பாசுரங்களாலே திருமலையை அநுபவிக்கிறார். எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடம் திருவேங்கடமலை யென்கிறார். அத்திருமலை எப்படிப்பட்ட தென்னில்; தினந்தோறும் பல பல திசைகளினின்றும் வைதிகர்கள் வந்து தூபதீபம் முதலிய திருவாராதநஸாமக்ரிகளைக்கொண்டு ஆச்ரயிக்கப்பெற்றது – என்கிறார். அந்த வைதிகர்கட்கு விசேஷணமிடுகிறார் வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் என்று ஸூக்ஷ்மமான சாஸ்த்ரார்த்தங்களையும் அலகலகாக நிச்சயித்தறியக் கூடிய கேள்வி வாய்ந்தவர்கள்- பஹூச்ருதர்கள் என்றபடி.

English Translation

Your favoured abode is venkatam, O Lord Tirumal who blows the white conch Panchajanyal vedic seers of high merit and learning gather from all Quarters with lamp, incense and water to offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்