விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அவர்அவர் தாம்தாம்*  அறிந்தவாறு ஏத்தி,* 
    இவர்இவர் எம்பெருமான் என்று,* - சுவர்மிசைச்- 
     
    சார்த்தியும்*  வைத்தும் தொழுவர்*  உலகுஅளந்த- 
    மூர்த்தி உருவே முதல். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுவர்மிசை சார்த்தியும் - சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும் - பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
முதல் - முக்கியமானது
தொழுவர் - தொழுகின்றார்கள்;
உருவே - திருமேனியொன்றே

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “ஆதியாய் நின்றாரவர் என்றதை விவரித்துப்பேசுகிறது இப்பாட்டு. உலகத்திலுள்ள ஜனங்கள் ஒவ்வொரு தெய்வங்களைப் பரதேவதையாகக்கொண்டு தாம் தாம் கற்ற சொற்களைக்கொண்டு அத்தெய்வங்களைத்துதித்து விக்ரஹாராதநம் விசேஷ மென்றறிந்து சுவர்களிலே சித்திரரூபமாக அத்தெய்வங்களை யெழுதியும் லோஹமய பிம்பங்களாக ஆலயங்களில் பிரதிஷ்டைசெய்தும் தொழா நின்றார்களாகிலும், அம்மன் பிடாரி முதற்கொண்டு சிவன் முடிவாகவுள்ள தெய்வங்களுக்கெல்லாம் ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே பிரதான தேவதையாம் என்றாராயிற்று. கீழ்ப்பட்ட தெய்வங்களுக்கெல்லாம் எம்பெருமானை ஆச்ரயித்தே ஸத்தை பெறவேண்டும்படி அவனே முழுமுதற் கடவுள் என்கை. அவரவர் என்ற சுட்டு – அவர்களின் குணக்குறைவைக்காட்டும். ஸத்வகுண பூர்த்தியில்லாத ஜனங்களெல்லாம் என்றபடி. தாந்தாமறிந்தவாறாவது- சாஸ்த்ரங்களையும் சிஷ்டா சாரங்களையுங்கொண்டு அறியகில்லாமல் தங்களுடைய ராஜஸ தாமஸபுத்திகளுக்கு எட்டியவாறு. இப்பாட்டில் ஸ்ரீமந் நாராயணனை ‘உலகளந்தமூர்த்தி’ என்ற திருநாமத்தால் குறிப்பிட்டது கருத்தோடு கூடியதாம்; புருஷோத்தமனான எம்பெருமானை விட்டு க்ஷூத்ர தெய்வங்களைப் பணிகின்ற ஸம்ஸாரிகளோடு அத்தெய்வங்களோடு வாசியின்றியே எல்லாரும் தன்னுடைய திருவடியின் கீழே துகையுண்ணுமாறு உலகங்களை வியாபித்தவனென்று சொல்லுமாற்றால் இவனே முழுமுதற் கடவுளென்று மூதலித்தாராய்த்து. மூர்த்தி- ஸ்வாமி.

English Translation

According to their nature, and each according to his understanding, they all worship their chosen deity, placed on a pedestal or drawn on the wall, as their god. Yet the lord who measured the Earth is the first-cause lord and foremost of all.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்