விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொண்டல்வண்ணா!  இங்கே போதராயே*  கோயிற் பிள்ளாய்!  இங்கே போதராயே* 
    தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த*  திருநாரணா!  இங்கே போதராயே* 
    உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி*  ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்*
    கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்*  கண்ணபிரான் கற்ற கல்வி தானே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொண்டல் - காளமேகம் போன்ற
வண்ணா - வடிவையுடையவனே!
இங்கே போதராய் - இங்கே வாராய்;
கோயில் - திருவரங்கத்தில் வஸிக்குமவனான
பிள்ளாய் - பிள்ளையே!

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “வருகவென்றுன் மகன்றன்னைக் கூவாய்” என்று சில ஆய்ச்சிகள் முறையிட்டவாறே யசோதைப்பிராட்டி கண்ணபிரானைப் பலபடியாகப் புகழ்ந்து ‘கண்ணா! முலையுண்ணவா’ என்றழைக்க, அவன் தன் மகிழ்ச்சி தோற்ற “யான் அம்மமுண்டு வந்தேன்காண்! “ என்று சொல்லி ஓடிவந்து அகத்தினுள்ளே புகுர, அவ்யசோதை அவன் வந்த அழகையும் முகமலர்த்தியையுங் கண்டு மகிழ்ந்து அக்கண்ணபிரானை எதிர்கொண்டு சென்று அவனைத்தன் இடுப்பிலேற்றி அணைத்துக் கொண்டவாற்றை ஆழ்வார் அநுஸந்தித்து ‘இவ்வகையான பரிமாற்றத்தைப் பெறும்படி கண்ணன் கற்ற கல்வியுமொன்றே! என்று வியக்கின்றனர். அன்றிக்கே, முன்னிரண்டடியும் பின்னிரண்டடியும் நன்கு பொருந்துமாறு தாயான யசோதைதானே வியக்கின்றாளென்று உரைத்தலும் உரித்தென்க; அப்போது “ஆய்ச்சிதானுங் கண்டெதிரே சென்றெடுத்துக்கொள்ள” என்றது தன் செயலைப் பிறர் சொல்லுமாபோலே தானே சொன்னபடியெனக் கொள்க. கண்ணன் முன்பு செய்த தீமைகளைத் தாயாகிய தான் மறந்துவிட்டு அவனை யெதிர் சென்றெடுத்துக் கொள்ளும்படி அவன் பண்ணின விசித்திரத்தில் ஈடுபட்டு ‘இப்பருவத்திலே இவள் இவ்வளவு விரகனானதே!’ என்று தன்னில்தான் புகழ்ந்து மகிழ்ந்து பொலிகின்றாளென்க. கோயில் -இத்திருநாமம் திருவரங்கத்தின் மேல் வழங்குவது ஸம்ப்ரதாயம். திருப்பேர் - இது சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று. நன்னூலில் “ஒருபொருள்மேற்பல பெயர்வரினிறுதி, ஒருவினை கொடுப்ப தனியுமொரோ வழி” என்றபடி இப்பாட்டில் ‘கொண்டல்வண்ணன்’ ‘கோயிற்பிள்ளை’ ‘திருநாரணன்’ என்பன கண்ணனென்னும் ஒரு பொருளேயென்பது தெளிய நின்றதனால், பெயர்தோறும் ‘போதராய்’ என ஒருவினை கொடுக்கப்பட்டது.

English Translation

“O Cloud hued Lord! Come here! O Divine Child! Come here! O Tirunarayana reclining in Tirupper surrounded by pure flowing water, come here!” He runs into the house saying he has already sucked; Dame Yasoda intercepts him and picks him up thinking “so, these too are part of the tricks he has learnt!”

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்