விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இளைப்பினை இயக்கம் நீக்கி*  இருந்துமுன் இமையைக் கூட்டி,* 
    அளப்பில் ஐம்புலன்அடக்கி*  அன்புஅவர் கண்ணே வைத்து,*
    துளக்கம்இல் சிந்தை செய்து  தோன்றலும் சுடர்விட்டு,*  ஆங்கே- 
    விளக்கினை விதியின் காண்பார்*   மெய்ம்மையைக் காண்கிற் பாரே    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுடர்விட்டு தோன்றலும் – ஜ்வலித்துக்கொண்டு தோன்றுமளவிலே
விளக்கினை – விளக்காகிய எம்பெருமானை
வீதியின் – சாஸ்திர விதிப்படியே
காண்பார் – காணவேணுமென்றிருக்கிற உபாஸகர்கள்
மெய்ம்மையே – உள்ளபடியே

விளக்க உரை

க்லேசமிதா ராகத்வேஷாபிநிவேசா‘ க்லேசா“ என்று பாதஞ்சலதர்சனத்தில் சொல்லப்பட்டது; அவித்யை யாவது அஜ்ஞாநம். அஸ்மிதையாவது அஹங்காரம். ராகமாவது இச்சாவிசேஷம்; த்வேஷமாவது பகை; அபிநிவேசமாவது மரணபயம். (என்று குஸுமாஞ்சலியில் விவரணம் செய்யப்பட்டுள்ளது.) ஆக இப்படிப்பட்ட க்லேசங்களின் ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (இருந்து) காற்றாடிபோலே எப்போதும் பறந்துகொண்டே யிருக்குமியல்வினர்க்கு ஓரிடத்தேயிருப்பது அருமையாகும்; அப்படிப்பட்ட அருந்தொழிலாகிய இருப்பைச் செய்து (முன்னிமையைக்கூட்டி) ஒரு திக்கையும் நோக்காமல் தன் மூக்கின் நுனியையே நோக்கிக் கொண்டிருக்க வேணுமென்று சொல்லியிருக்கிறபடி செய்து என்றவாறு. மேலிமையைக் கீழிமையோடு சேர்த்தலே இந்த நிலைமையாகும். (அளப்பில் ஐம்புலனடக்கி) அளவில்லாத விஷயாந்தரங்களிலே பட்டி மேயக்கூடிய பஞ்சேந்திரியங்களை உள் விஷயத்தோடே நிற்கும் படிசெய்து. (அன்பு அவர்கண்ணே வைத்துத் துளக்கமில் சிந்தைசெய்து) தைலதாரைபோலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தானரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி என்றவாறு. (ஆங்கே சுடர்விட்டுத் தோன்றலும் இத்யாதி) ஆகவிப்படிப்பட்ட முறையிலே ஜாஜ்வல்யமா நமாய்க்கொண்டு தோன்றுகிற ஞானத்தாலே வேத விளக்காகிய எம்பெருமானை சாஸ்திரங்களில் விதித்தபடியே உபாஸனை பண்ணி ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்று பெருமுயற்சி செய்பவர்கள் அவனை மெய்யாகக் காணமுடியுமோ? அப்பெருமான் தானே தனது நிர்ஹேதுக க்ருபையினால் தன்னைக்காட்டிக் கொடுத்தருளினால் காணலாமத்தனை யொழிய ஊன்வாடவுண்ணாதுயிர் காவலிட்டு உடலிற்பிரியாப் புலனைந்தும் நொந்து தாம் வாட வாடத் தவஞ் செய்கையாகிற ஸ்வப்ரயத்நங்களாலே அவனை ஸாக்ஷத்கரிக்கை எளிதோ? என்றாராயிற்று. “பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலா வூழியூழி தவஞ் செய்தார் வெள்கிநிற்ப, விண்ணுளார் வியப்பவந்து ஆனைக்கன்றருளை யீந்த“ என்கிறபடியே பல்லூழியூழிகாலமாகத் தவம் புரிந்து வருந்தி நின்றவர்களெல்லாம் வெட்கப்பட்டு நிற்கும்படியாக ஸ்ரீ கஜேந்திராழ்வான்போல்வார் திறத்திலே பரம க்ருமைசெய்தருள்பவனான எம்பெருமானுடைய ஸ்வபாவத்திற்கு இணங்க இப்பாட்டுக்கு இங்ஙனே உரையிடுதல் மிகப்பொருந்தும். பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் இங்ஙனே விரிவாக உரையிட்டருளின பின், “அதுவா, இப்படி யோகசாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாஸித்துக் காண்பார்க்குக் காணலாமென்றுமாம்“ என்கிற மற்றொரு நிர்வாஹமும் அருளிச் செய்யப்பட்டுள்ள காண்க.

English Translation

Seated firmly without fatigue or fidgeting, bring your upper eyelids close to the lower. Subdue the five senses, till your heart with love for the Lord alone. Let thought flow freely on that one alone. There in the effulgence emerging, you will see the Lord who is a body of light. Those who do so do surely see the truth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்