விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொண்டுஎல்லாம் பரவி நின்னைத்*  தொழுதுஅடி பணியுமாறு- 
    கண்டு,*  தான் கவலை தீர்ப்பான்*  ஆவதே பணியாய் எந்தாய்,*
    அண்டம்ஆய் எண்திசைக்கும்*  ஆதிஆய் நீதிஆன,* 
    பண்டம்ஆம் பரம சோதி*  நின்னையே பரவு வேனே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எண் திசைக்கும் ஆதி ஆய் - எட்டுத் திசைகளிலுள்ள தேவதை கட்கும் காரணபூதனாய்
நீதி ஆன பண்டம் ஆம் - முறைமையான செல்வமாயிருப்பவனான
பரம சோதி - பரஞ்சோதியே!
நின்னையே - உன்னையே
பரவுவேன் - ஸ்தோத்ரம் பண்ணுவேன்.

விளக்க உரை

”ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும். நாம்“ என்று நம்மாழ்வாரும், பவாம்ஸ்மு ஸஹவைதேஹயா கிரிஸாநஷுரம்ஸ்யதே, அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதச்சதே.“ என்று இளைய பெருமாளும் பாரித்துப் பேசினாப்போலே அடியேனும் எல்லாத் தொண்டுகளையும் செய்திடுவோமென்று பாரிப்புக்கொண்டு தேவரீரைத் திருவடி தொழவேணு மென்றும் மநோரதங்கொண்டிருக்குமளவால். என்னுஐடய மனத் துன்பங்களை நான் போக்கிக் கொண்டேனாக வழியுண்டோ? தேவரீர் திறத்திலே கைங்கரியம் செய்வதோ, தேவரீர் திருவடிகளைத் தொழுது பணிந்து நிற்பதோ எல்லாம் தேவரீருடைய திவ்யஸங்கல்பத்தினால் நடைபெற வேண்டியவையேயன்றி எலியெலும்பனான நீசனேன் நினைத்தபடி எதுதான் ஆகும்? ஒன்றுமாகாது; என் கவலையை நானே தீர்த்துக்கொள்ளவல்லனோ? அல்லேன். தொண்டு செய்தலும் நின்னைத் தொழுதபடிபணிதலும் தலைக்கட்டப்பெற்றால் கவலைதீரத் தட்டில்லை; அவை தலைக்கட்டுவது தேவரீருடைய ஸங்கல்பத்தாலாகுமத்தனையாதலால் அங்ஙனே தேவரீர் ஸங்கல்பித் தருளவேணுமென்று தேவரீரையே துதித்துப் பிரார்த்திக்கின்றனென்கிறார். “பரந்த சிந்தையொன்றி நின்று நின்னபாதபங்கயம், நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்கவேண்டுமே“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தின் கருத்தை இங்குக் காண்க. எண்டிசைக்கு மாதியாய் = அஷ்டதிக் பாலகர்களுக்கும் பாலகன் என்றபடி. நீதியான பண்டம் = பண்டமாவது தனம்; நீதியானபண்டமானது, முறைமைப்படி ப்ராப்தமான தனம், “சேலாய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையுமவரே“ என்கிறபடியே எமக்கு ப்ராப்தமான செல்வம் தேவரீரே யென்றவாறு.

English Translation

My Lord! You are the universe; you are the cause and effect in all the eight Quarters. You are my wealth. Your light effulgent, Seeking service at your feet, I worship you. I Praise you for this alone, makes me your slave, rid me of my worries.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்