விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சித்தமும் செவ்வை நில்லாது*  என்செய்கேன் தீவினையேன்? 
    பத்திமைக்கு அன்புஉடையேன்*  ஆவதே பணியாய் எந்தாய்,*
    முத்துஒளி மரகதமே!*  முழங்குஒளி முகில்வண்ணா,*  என்- 
    அத்த! நின் அடிமை அல்லால்*  யாதும்ஒன்று அறிகிலேனே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சித்தமும் - நெஞ்சமும்
செவ்வை நில்லாது - தரித்துநிற்கிற தில்லை;
தீ வினையேன் - மஹா பாபியான நான்
என் செய்கேன் - என்ன பண்ணுவேன்?
எந்தாய் - எம்பெருமானே!

விளக்க உரை

கடலிலே நீந்தவேணுமென்று புகுந்து முதலடியில் தானே தெப்பத்தை இழக்குமாபோலே, அநுஸந்திக்கப்புகுந்து தரித்து நிற்கமாட்டாதே நெஞ்சு பறியுண்டதென்கிறார். “உருகுமால் நெஞ்சமுயிரின் பரமன்றிப், பெருகுமால் வேட்கையுமென்செய்கேன் தொண்டனேன்“ என்ற நம்மாழ்வாரைப் போலே கதறுகிறார். பக்திப்பாரவச்யத்தாலே அநுபவிக்கப் போகாமால் நெஞ்சையிழக்கும்படியான பாபத்தைப் பண்ணின நான் என்ன செய்வேனென்கிறார்: (பத்திமைக்கு அன்புடையேனாவதே பணியாய்) ஜந்மதரித்ரனுக்கு அளவுகடந்த பசியுண்டானால் பசிக்குத் தக்கபடி உணவுகிடைக்கப் பெறாதொழியில் ‘பசி மந்தித்துப் போவதற்கு மருந்து கொடுப்பாருண்டோ?‘ என்று விசாரிக்குமாபோலே ஆழ்வாரும் தம்முடைய பேராசைக்குத் தக்கபடி அநுபவிக்கப் பெறாமையாலே ஆசையை அளவுபடுத்தினால் போது மென்கிறார். அளவுகடந்த ஆசைநிலைமைக்குப் பத்திமை யென்று பெயர்; ஓரளவிலே நிற்கிற ஆசைநிலைமைக்கு அன்பு என்று பெயர் என்பதாகக் கொள்க. இப்போது ஆழ்வாருடைய ஆசையின் நிலைமை எல்லைகடந்த அவஸ்தையிலே நிற்பதால் ‘இப்படிப்பட்ட பத்திமையைக்கொண்டு என்னால் பாடாற்றப்போகவில்லை, இந்த நிலைமையை மாற்றி வெறும் அன்பு நிலைமையையே தந்திடாய்‘ என்று வேண்டிக்கொள்ளுகிறார். ”என்றனளவன்றால் யானுடையவன்பு” என்னுமாபோலே அளவுகடந்து செல்லுகின்ற ஆசைப்பெருக்கத்தைக் குறைத்து ஓரளவிலே அமைத்திடாய் என்கை. பசிக்குத்தக்க சோற்றையாவது இடு; அல்லது, பசியையாவது உள்ள சோற்றுக்குத் தகுதியாக அமைத்திடு என்பாரைப்போலே சொல்லுகிறார். “கணபுரைத்துப் பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல், என்னிவைதான் வாளாவெனக்கே பொறையாகி, முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர், மன்னுமருந்தறிவீரில்லையே” என்ற பெரிய திருமடலும் இக்கருத்துப் படநின்றமை உணர்க.

English Translation

O Cool Pearl! O Emerald! O Lord of ocean-hue! My Master! Alas, my heart does not stay firmly on you. What can I do? Wicked one! Make me love your feet with Bhakti, My Liege! Other than service to you, I know nothing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்