விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இம்மையை மறுமை-தன்னை*  எமக்கு வீடுஆகி நின்ற,* 
    மெய்ம்மையை விரிந்த சோலை*  வியன் திருஅரங்கம் மேய,*
    செம்மையை கருமை தன்னை*  திருமலை ஒருமையானை,* 
    தன்மையை நினைவார் என்தன்*  தலைமிசை மன்னுவாரே    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இம்மையை - இவ்வுலகத்து இன்பத்தைத் தருமவனும்
மறுமை தன்னை - பரலோகத்து இன்பத்தைத் தருமவனும்
விரிந்த சோலை - பரந்தசோலைகளையுடையதாய்
வியன் - ஆச்சரியமான
திரு அரங்கம் - ஸ்ரீரங்கத்திலே

விளக்க உரை

செம்மையைக் கருமைதன்னை – எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக்கொள்வன்; கிருதயுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால்போன்ற நிறத்தைக் கொள்வன்; த்ரேதாயுகத்திலே சிவந்த நிறத்தைக்கொள்வன், த்வாபரயுகத்திலே பசுமை நிறத்தைக்கொள்பவன்; கலியுகத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தோடிருப்பவன். (இது ”பாலினீர்மை செம்பொனீர்மை” என்ற திருச்சந்தவிருத்தப் பாசுரத்திலும் ”நிகழ்ச்தாய் பால் பொன் பசுப்புக்கார்வண்ணம் நான்கும்” என்ற நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்திலும் திருமழிசைப்பிரானாலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.) இங்கு ”செம்மையைக் கருமை தன்னை” என்று இரண்டு யுகங்களின் நிறத்தைச் சொன்னது மற்றவர்க்கும் உபலக்ஷணமென்க. திருமலையொருமையானை = ”தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே” என்றும் சொல்லுகிறபடியே திருமலையிலே நின்று நித்யஸூரிகளுக்கும் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கும் அவன் என்றவாறு. ஒருமையான் – ஒருமைப்பட்டிருப்பவன், பொதுவாயிருப்பவன், திருமலையானது நித்ய விபூதிக்கும் லீலாவிபூதிக்கும் நடுநிலை என்பதாகத் திருவுள்ளம். இங்குள்ளார் சென்று பரத்வகுணத்தை அநுபவிப்பர்கள்; அங்குள்ளார் வந்து சீலகுணத்தை அநுபவிப்பர்கள்; ஆக இருபாடர்க்கும் வைப்பாயிருப்னென்க.

English Translation

The Lord of Arangam is the salvation for this world and the next. He is a dark form in Arangam amid fertile groves. He is the dark mountain Lord of venkatam, Those who wroship him are my masters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்