விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மூவரில் முதல்வன்ஆய*  ஒருவனை உலகம் கொண்ட,* 
    கோவினை குடந்தை மேய*  குருமணித் திரளை,*  இன்பப்-
    பாவினை பச்சைத் தேனை*  பைம்பொன்னை அமரர் சென்னிப்- 
    பூவினைப்,*  புகழும் தொண்டர்*  என்சொல்லிப் புகழ்வர் தாமே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மூவரில் - த்ரி மூர்த்திகளுள்
முதல்வன் ஆய ஒருவனை - முதற் கடவுளாகிய அத்விதீயனும்
உலகம் கொண்ட கோவினை - (மாவலியிடத்தில்) உலகங்களை இரந்து பெற்ற ஸ்வாமியும்
குடந்தை மேய - திருக்குடந்தையில் நித்ய வாஸம் செய்பவனும்
குரு மணி திரளை - சிறந்த நீலரத்னக்குவியல் போன்றவனும்

விளக்க உரை

இன்பப் பாவினை – ”அந்தமிழினின்பப் பாவினை” என்றார் குலசேகரப் பெருமாளும். அருளிச் செயல்போலே செவிக்குத் தித்திப்பவன் எம்பெருமான் என்றவாறு. பச்சைத் தேனை – செவிக்குமாத்திரமன்றியே நாவுக்கும் இனியனா யிருப்பவன்; நாள்பட்ட தேன் போலல்லாமல் அப்போதுண்டான தேன்போலே பரமபோக்யன். பைம்பொன்னை – உடம்புக்கு அணையலாம்படி விரும்பத்தக்கவனென்க. அமரர் சென்னிப்பூவினை-நித்யஸூரிகள் தலைமேற் புனைந்து கொண்டாடும் தத்துவம். ”எம்மாவீட்டுத் திறமும் செப்பம், நின்செம்மா பாதபற்புத் தலைசேர்த்து ........ அம்மா வடியேன் வேண்டுவதே” என்று நாமெல்லாரும் பிரார்த்தித்துப் பெறவேண்டிய பேறு சிலர்க்குக் கைவந்திருக்கின்றதே யென்று தலைசீய்க்கிறார். ஆக இப்படிப்பட்ட எம்பெருமானைப் புகழ்கின்ற தொண்டர்கள் என்சொல்லிப் புகழ்வரென்கிறார். இத்தால், தாம் பாசுரம் பேசுவதும் எம்பெருமானுடைய பெருமையின் எல்லையைக்கண்டன்று; போதுபோக்க வேண்டியத்தனை என்றதாம்.

English Translation

The first-among-the-Tri-murti-Lord, who took the Earth as his, is our king who resides in Kudandai. He is precious as a heap of gems, sweet like music and pure honey. He is the flower worn by the gods on their heads. Oh, with what words can devotees praise him fully?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்