விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இரும்புஅனன்றுஉண்ட நீர்போல்*  எம்பெருமானுக்கு*  என்தன்- 
    அரும்பெறல் அன்புபுக்கிட்டு*  அடிமை பூண்டு உய்ந்து போனேன்,*
    வரும்புயல் வண்ணனாரை*  மருவிஎன் மனத்து வைத்து,* 
    கரும்பின்இன் சாறு போலப்*  பருகினேற்கு இனியவாறே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இரும்பு - இரும்பானது
அனன்று - பழுக்கக் காய்ந்து
உண்ட நீர் போல் - (அக்காய்ச்சலடங்கும்படி) உட்கொண்ட ஜலம்போலே
எம்பெருமானுக்கு - எம்பெருமான் திறத்திலே
என் தன் - என்னுடைய

விளக்க உரை

இரும்பானது அக்நியாலே மிகவும் காய்ச்சப்பட்டு அக்காய்ச்சலடங்க நீரைப் பருகுமாபோலே நானும் என்னுடைய தாபமடங்க பகவத் விஷயத்தில் அன்பாகிற தண்ணீரைப் பருகி, ப்ராப்தமான அவ்விஷயத்திலே அடிமை செய்யப்பெற்று உஜ்ஜீவித்தேனென்பன முன்னடிகள். தகாத விஷயங்களில் அன்பு உண்டாவதே ஹைஜமாய், பகவத் விஷயத்தில் அன்பு உண்டாவது மேட்டுமடையா யிருத்தல் பற்றி அரும்பெறலன்பு எனப்பட்டது. நெருப்பிலே தாமரை பூத்தாலும் பூக்கும்; அஹய்காரப் பெரு நெருப்பிலே எம்பெருமான் விஷயமான அன்பு விளைவது மிகவுமரிது. ‘அடிமைப்பூண்டு‘ என்றதனால் ஆத்மாவுக்கு அடிமையே ஆபரணமென்பது பெறப்படும். (வரும்புயல் வண்ணனாரை இத்யாதி.) இருந்தவிடத்தே யிருந்து வர்ஷித்து இன்பம் பயக்கும் மேகம்போலே அடியாருள்ள விடங்களிலே சென்று வர்ஷித்து இன்பம் பயக்கும் மேகம்போலே அடியாருள்ள விடங்களிலே சென்று ஈரக்கையாலே தடவி விடாய் தீர்க்குமவன் எம்பெருமான். அன்னவனை என்மனத்திலே பொருந்தவைத்துக் கருப்பஞ்சாறு போலே பருகினேன்; பருகின மாத்திரத்திலே வாயாற்சொல்வொண்ணாத இனிமையாயிருக்கின்றதே! ; இதற்கென்ன காரணம்! தெரியவேணுமென்றாராயிற்று.

English Translation

Like a hot iron drinking up water my love swelled. I directed if to the Lord, made myself his devotee, and found my refuge. Bearing the cloud-hued Lord in my heart, I drink him like sugarcane juice. Ah, How sweet he is!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்