விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாயிரும் பரவை தன்னுள்*  பருவரை திரித்து,*  வானோர்க்கு- 
    ஆயிருந்து அமுதங் கொண்ட*  அப்பனை எம்பிரானை,*
    வேயிருஞ்சோலை சூழ்ந்து*  விரிகதிர் இரிய நின்ற,* 
    மாயிருஞ்சோலை மேய*  மைந்தனை வணங்கி னேனே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாய் இரு பரவை தன்னுள் - பரந்து ஆழ்ந்த திருப்பாற்கடலிலே
பரு வரை - பெரியதான (மந்தர) மலையை
திரித்து - சுழலச்செய்து (கடல் கடைந்த)
வானோர்க்கு ஆய் இருந்து - தேவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அமுதம் கொண்ட - அமுதமெடுத்துக் கொடுத்தருளின

விளக்க உரை

தன்னை விரும்பாமால் பிரயோஜநாந்தரத்தையே விரும்பி அகன்று போக நினைப்பார்க்கும் திருமேனி நோவக் காரியஞ் செய்தருள்பவனாயிராநி்ன்றான் எம்பெருமான்; விபவாவதாரங்களிலே இழந்தார்க்கும் உதவுவதற்காகத் திருமாலிருஞ்சோலை மலை முதலிய திருப்பதிகளிலே கோயில்கொண்டிரா நின்றான்; அன்னவனை வணங்கியுய்ந்தேனென்கிறார். கடல் கடையும் போது மந்தரமலையை மத்தாக நாட்டிக் கடைந்தனனாதலால் ‘பருவரைதிரித்து‘ எனப்பட்டது. எம்பெருமான் அவாப்தஸமஸ்த காமனாகையாலே அவன் செய்தருளுங் காரியமெல்லாம் பிறர்க்காகவே யிருக்கும்; நிலா தென்றல் சந்தனம் முதலிய பொருள்கள் பிறர்க்கு உபயோகப்படுவதற்கென்றே யிருப்பது போலவே எம்பிரானுமிருப்பனென்பது விளங்க வானோர்க்காயிருந்து என்றது. ”அமுதம் தந்த” என்ன வேண்டியிருக்க கொண்டே என்றது – எம்பெருமானது நினைவாலென்க. கடல் கடைந்து அமுதமெடுத்தது அவர்களுக்காக வல்லாமல் தன்பேறாக நினைத்திருந்ததனால்.

English Translation

Let us worship the Lord who planted a mountain in the deep ocean, churned it and gave ambrosia to the gods. He is my Lord residing in Malirumsolai surrounded by dense Bamboo thickets.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்