விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பின்னை மணாளனை*  பேரிற் கிடந்தானை* 
    முன்னை அமரர்* முதற் தனி வித்தினை* 
    என்னையும் எங்கள்*  குடி முழுது ஆட்கொண்ட* 
    மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய்! (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அக்காக்காய் - காக்கையே;
பின்னை - நப்பின்னைப் பிராட்டிக்கு;
மணாளனை - நாயகனும்;
பேரில் - திருப்பேர்களிலே;
கிடந்தானை - பள்ளிகொண்டிருப்பவனும்;

விளக்க உரை

காக்கை வந்து கத்தும்போது குழந்தைகள் பராக்காயிருக்குமாதலால், அப்போது தலைவாருதல் ஸுகமாய் முடியுமென்பது பற்றி, அக்காரியத்தைக் காக்கையின் மேலேற்றிக் ‘குழல்வாராய் அக்காக்காய்’ என்றாள் என்க. ‘அக்காக்காய்!’ என்று காக்கையை விளித்துக் குழந்தைகளுக்குக் குழல்வாரி முடித்தால், உலக வழக்கத்திலிருப்பது காண்க. ‘முதல்’ என்றதனோடும் இரண்டனுருபு கூட்டுக. வித்து – ஸீஜம். எனவே, ஆதிகாரணம். பேர் – திருப்பேர்நிகர், சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று.

English Translation

This is the bridegroom of Nappinnai, this is the Lord reclining in Tirupper. He is the first cause of the ancient celestials, he is the king come to rule me and all my clan. He is the Lord Madhava. O

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்