விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அப்பம் கலந்த சிற்றுண்டி*  அக்காரம் பாலிற் கலந்து* 
    சொப்பட நான் சுட்டு வைத்தேன்*  தின்னல் உறுதியேல் நம்பி!*
    செப்பு இள மென்முலையார்கள்*  சிறுபுறம் பேசிச் சிரிப்பர்* 
    சொப்பட நீராட வேண்டும்*  சோத்தம் பிரான்! இங்கே வாராய்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நம்பி - (பால சாபலத்தால்) பூர்ணனே;
செப்பு - பொற்கலசம்போன்ற;
இள மெல் முலையார்கள் - இளமையான மெல்லிய முலையையுடைய மாதர்கள்;
சிறுபுறம் பேசி - (உன்மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி;
சிரிப்பர் - பரிஹஸிப்பார்கள். (அன்றியும்);

விளக்க உரை

‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான். அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு. சிறுமை + உண்டி – சிற்றுண்டி. “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம். (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி. புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.

English Translation

I have made a snack of sweetmeats cooked with milk and sugar. My Lord, are you ready to have it? Come then. Red supple-breasted girls will laugh and speak ill of you behind for your back, you must hav

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்