விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கன்றுகள் ஓடச் செவியிற்*  கட்டெறும்பு பிடித்து இட்டால்* 
    தென்றிக் கெடும் ஆகில்*  வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்*
    நின்ற மராமரம் சாய்த்தாய்!*  நீ பிறந்த திருவோணம்* 
    இன்று நீ நீராட வேண்டும்*  எம்பிரான்! ஓடாதே வாராய்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்ற - நிலையாய்நன்ற;
மராமரம் - (ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே;
கன்றுகள் - பசுவின் கன்றுகள்;
ஓட - வெருண்டோடும்படி;
செவியில் - (அக் கன்றுகளின்) காதில்;

விளக்க உரை

கன்று உண்டானால் பசு கறக்கலாம், பசுவைக் கறந்தால் பாலுண்டாகும், பாலுண்டானால் வெண்ணெயுண்டாகும், ஆகவே, வெண்ணெய் வேணுமென்றால், கன்றுகள் அவசியம் வேணும், அக்கன்றுகள் வெருண்டோடுவதைக் காண்கைக்காக நீ அவற்றின் காதுகளில் கட்டெறும்பைப் பிடித்துப் புகவிட்டால் அவை காணமுடியாதபடி ஓடிப்போய்விடுமே’ பின்பு உனக்கு இஷ்டமான வெண்ணெய் கிடைக்கும்படி யெங்ஙனே? என்பது முதலிரண்டடிகளின் கருத்து. ‘வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்’ என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடைக்காது என்ற கருத்தைக் காட்டும், இது ஒருவகை எதிர்மறை இலக்கணை, பிற குறிப்பு, ஆ – ‘ஆறு’ என்பதன் விகாரம். (மராமரம் சாய்த்தாய்.) ராமாவதாரத்தில் ரிச்யமூகபர்வதத்தில் ஸுக்ரீவனுக்குத் தன் வலியின் மிகுதியைக் காட்ட ஏழு மராமரங்களை ஒருங்கே எய்தவனென்ற வரலாறு காண்க.

English Translation

If you catch insects and let them into the calves’ ears, they will go helter-skelter and run away. Let me see how you gobble butter thereafter. O Lord who shot through seven trees, it is your birth st

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்