விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்*  என்னை நான் மண் உண்டேனாக* 
    அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்*  அனைவர்க்கும் காட்டிற்றிலையே?*
    வன் புற்று அரவின் பகைக் கொடி*  வாமன நம்பீ! உன்காதுகள் தூரும்* 
    துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே! திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நான் மண் உண்டேன் ஆக - நான் மண்ணுண்டதாகச்சொல்லி;
என்னை - (மண் திண்ணாத) என்னை;
பிடித்தும் - பிடித்துக் கொண்டும்;
அன்பு உற்று - அன்பை ஏறிட்டுக்கொண்டு (அன்புடையவன் போல);
நோக்கி - (என்வாயைப்) பார்த்து;
அடித்தும் - (என்னை) அடித்தும்;

விளக்க உரை

கண்ணன் யசோதையை நோக்கி “தலைநிலாப்போதே உன் காதைப்பெருக்காதே விட்டிட்டேன் குற்றமேயன்றே” என்று நீ உன்னை வெறுத்துச் சொல்லுவது - நீ சொன்னதை நான் கேட்கவில்லையென்று என்மேலுள்ள குற்றத்தை நினைத்தன்றோ? என்ன அதற்கு யசோதை ‘பின்னை யார் குற்றம்?’ என்ன கண்ணன் ‘உன் மீதுங் குற்றமில்லையோ?’ என்ற யசோதை ‘நானுன்னை என்ன செய்தேன்?’ என்ன; கண்ணன் ‘நான் மண் திண்ணாதிருக்கையில் மண தின்றதாகப் பழியையேறிட்டு என்மேல் அன்புடையாள்போல என்னைப் பிடித்துக்கொண்டு என் வாயில் மண் தின்ற சுவடு இருக்கிறதாவென்று பார்த்து அது இல்லாதிருக்கையிலேயே அதைக் கண்டதாகச் சொல்லியடித்து அவ்வளவோடு நில்லாமல் ‘பாருங்கோள் பெண்காள்! இவன் மண் திண்ணும்படியை’ என்று எல்லார்க்கும் நீ காட்டவில்லையோ’ என்ன யசோதை ‘இப்படி நாம் வழக்காடிக் கொண்டிருந்தால் போதுபோகின்றது ஆச்ரிதருடைய ஆர்த்தியைத் தீர்க்குமவனே! உன் காதுகள் தூர்ந்துவிடும்’ என்ன கண்ணன் ‘நீ என்னை ஸ்தோத்ரம் பண்ணவேண்டா என்னைப் பிடித்தல் அடித்தல் செய்வதில்லையென்று உறுதியாக ஒரு வார்த்தை சொல்’ என்ன யசோதை ‘நான் திரியிடும்படி நீ இசைந்துவா பின்பு அங்ஙனமே ஸத்யம் பண்ணித்தருகிறேன்’ என்கிறாள். சொல்லவும் வேண்டா - நெஞ்சினால் நினைத்ததே சாலவழகிது இதனை வாய்கொண்டு வெளிப்படச் சொல்லவும் வேணுமோ? என்றவாறு.

English Translation

O Vamana, You say, “Do not pretend to regret your mistakes. Did you not bind me, beat me, open my mouth and expose me to ridicule for eating mud?” o Lord whose banner bears the snake’s enemy Garuda,

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்