விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*  எந்தை! நின் சரண் என்னுடை மனைவி* 
    காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*  கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*
    ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து*  உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்* 
    ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேதம் வாய் மொழி - வேதங்களையே வாய்ப்பேச்சாகவுடையவனான
அந்தணன் ஒருவன் - ஒரு வைதிகப்ராமணன் (உன்னை அடுத்து)
எந்தை - ‘எமது தலைவனே!
நின் சரண் - உனக்கு அடைக்கலப் பொருளாகிறேன் யான்;
என்னுடை மனைவி - எனது மனைவியானவள்

விளக்க உரை

வைதிகனொருவன் எம்பெருமானருள் செய்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம் புகுகிறாரிதில். வைதிகனது வேண்டுகோளை அருளினாற்போல என் வேண்டுகோளையும் அருள்வாய் என வேண்டுகின்றார். வேதவாய்மொழியந்தணன் = “பொய்ம்மை மொழி புகன்றறியேன் புகலமன மெண்ணுகினும், மெய்ம்மையலதுரையாநா வேதநவில்பயிற்சியால்” என்றாற்போலக் கொள்ளலாம். வேதமோதினவனாகையாலே வாய்மை (ஸத்வம்) பொருந்திய மொழிகளை யுடையான் என்கை. வேதம்போலப் பயன்நிறைந்த வார்த்தையளையுடையான் என்றுமாம். எந்தை - இயல்பாகிய அண்மைவிளி; எனது பரமபிதாவே! என்றபடி. புத்திரனைப் பிதா காப்பதுபோல என்னை நீ காக்கக்டவை என்ற குறிப்பு. காதல் மக்களை = மறுமையில தாய்தந்தையர்க்கு ‘புத்;’ என்ற நரகத்தை இல்லாதபடி செய்தலும், இம்மையிலும் “மக்கள் மெய்தீண்டலுடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டலின்பஞ்செவிக்கு” என்றபடி பலவகையின்பந்தருதலும் பற்றி விரும்பப்படுகின்ற புதல்வர் என்கை. மக்கள் - பன்மைப்பெயர். பயத்தலும் - இறந்தகாலவினையெச்சம்.

English Translation

Then in yore you did go to the learned Vedic seer for your schooling and training. When the seer said he wanted his only son come to life from his long-drowned-in-sea-abode, you did go to the sea in the West and bring his son as he was and returned him. Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arangam!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்