விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏன் ஆகி உலகு இடந்து*  அன்று இரு நிலனும் பெரு விசும்பும* 
    தான் ஆய பெருமானை*  தன் அடியார் மனத்து என்றும்* 
    தேன் ஆகி அமுது ஆகித்*  திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்* 
    ஆன்-ஆயன் ஆனானைக்*  கண்டது தென் அரங்கத்தே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன் அடியார் மனத்து - தன் அடியவர்களது நெஞ்சிலே
என்றும் தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை - எப்போதும் தேன்போலவும் அமிருதம் போலவும் விளங்குமவனாயும்,
ஒருகால் - முன்பொருகாலத்திலே
மகிழ்ந்து - திருவுள்ள முவந்து
ஆன் ஆயன் ஆனானை - பசுக்களை மேய்க்குமிடையனாய்ப் பிறந்தவனாயுமுள்ள எம்பெருமானை

விளக்க உரை

பூமியை ஹிரண்யாக்ஷனென்னு மசுரன் பாயாகச் சுருட்டிக் கவர்ந்துபோனதும் ஒன்றுண்டு; பிரளய வெள்ளம் கொள்ளை கொண்டுபோனதும் ஒன்றுண்டு, பிந்திய வரலாறே பெரும்பாலும் ஆழ்வார்கள் அநுஸந்திப்பதாம். மேல் எட்டாம் பத்தில் “பாராரளவும் முது முந்நீர்ப்பரந்த காலம் வளைமருப்பில், ஏராரூருவத்தேன மாயெடுத்த வாற்றலம்மானை” (8-8-3). என்ற பாசுரத்தினால் இது விளங்கும்.

English Translation

The Lord who came as a boar and took the Earth and sky as his, the Lord who is always sweet-as-ambrosia to his devotees, the Lord who grazed cows heartily in the yore, -I have seen him in Southern Arangam amid cool waters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்