விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உறவு ஆதும் இலள் என்று என்று*  ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால* 
    மறவாதே எப்பொழுதும்*  மாயவனே! மாதவனே!' என்கின்றாளால்*
    பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்*  விண்ணோர்தங்கள 
    அறவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறவாத பேராளன் - கருமங்காரணமான பிறப்பையுடையனாகாத பெருமை பொருந்தியவனும்
பெண் ஆளன் - பெண் பிறந்தாரைத் தனக்காகவுடையவனும்
மண் ஆளன் - மண்ணுலகத்தவர்களை ஆள்பவனும்
விண்ணோர் தங்கள் அறவாளன் - நித்யஸூரிகளுக்குப் பரமதார்மிகனாயிருப்பவனுமான பெருமான்

விளக்க உரை

‘தாய் என்றும் தந்தையென்றும் பல உறவுமுறையா இருக்கும்போது அவர்களையெல்லாம் த்ருணமாக நினைத்துத் தள்ளிவிட்டுத் “தெளிவிலாக்கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும், ஒளியுளார்தாமேயன்றே தந்தையும் தாயுமாவார்” என்று ஒரு 1. பரபுருஷனையே ஸகலவித பந்துவுமாக்க கொண்டுவிட்டாளே இச்சிறுமி’ என்று நாட்டார் பழிதூற்றும் படியாயிற்று – என்று தாய் சொல்லும் இப்பேச்சில் வெறுப்பும் உவப்பும் விளங்கும். ‘என் மகள் அலர் தூற்றலுக்கு ஆளாய்விட்டாளே?, நற்குடிக்குப் பெரும்பழி விளைந்திட்டதே!’ என்று வருந்திச் சொல்லுவதாக நாட்டார்க்குப் பொருள்படும். ஆபாஸ பந்துக்களை யெல்லாம் விட்டிட்டு “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய்தந்தையும் அவரே யினியாவாரே” என்று ஆப்தபந்துவாகச் சொல்லப்பட்ட ஸ்ரீமந் நாராயணனையே இங்கொழிக்க வொழியாத உறவாகக் கொண்டாளே! என்கிற உவப்பு உள்ளுறையும்.

English Translation

"She has no filial bonds", thus and thus everyone keeps blaming her, Constantly all the time, she calls out "Madaval", "Wonder Lord!, "Boar!", "Birthless Lord!", "Thousand-named! "Sri Devi's, Bhu Devi's, Lord of the skies!" "O Ladies, -how can I accept what he did to my daughter frail!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்