விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மான் ஆய மென் நோக்கி*  வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்* 
    தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்*  திறம் பேசி உறங்காள் காண்மின்*
    கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக*  நந்தன் பெற்ற 
    ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வளையும் - (இவளது) வளைகளும்
சோரும் - (கையில் நின்று) நழுவாநின்றன;
தேனாய - தேனைக்கொண்ட
நறு துழாய் - மணம்மிக்க திருத்துழாயினாலாகிய
அலங்கலின் - மாலையினுடைய

விளக்க உரை

இப் பெண்பிள்ளையின் கண்ணழகை நான் என்சொல்வேன்!; இக்கண்ணழகிலே யீடுபட்டு அப்பெருமான் ஊணுமுறக்கமும் இல்லாமல் வருந்த வேண்டியிருக்க, அவன் திறத்திலீடுபட்டு இவள் வருந்துகிறாளே, திருமலையருவிபோலே கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகுகின்றமை காண்மின்; கைவளைகள் கழன்றொழிவது காண்மின்; ‘பெண்ணே! படுக்கையிற் கடந்து உறங்கு; உறங்கினாயாகில் கண்ணீர்ப் பெருக்கு மாறும்; என்று நான் சொன்னாலும், என்பேச்சைச் சிறிதும் செவியேற்காது “எம்பெருமான் அணிந்துள்ள திருத்துழாயின் தேன்வெள்ளத்தை என்சொல்வேன்! அதன் செவ்வியை என்சொல்வேன்! அதன் தொடையழகை என்சொல்வேன்! அதன் குளிர்த்தியை என்சொல்வேன்! அதன் பரிமளத்தை என்சொல்வேன்!” என்றிப்படி அவனது திருத்துழாயின் திறங்களை வாய்வெருவிக் கொண்டிருக்கின்றாளே யன்றிச் சிறிதும் கண்ணுறங்கப் பெறுகின்றிலன். இவளை இப்பாடுபடுத்தினவன் கோபாலகிருஷ்ண னென்கிறாள் பின்னடிகளில்.

English Translation

See, her fawn-like sharp eyes are in tears, her bangles do not remain. All night long she talks of cool nectared Basil and loses her sleep. Forester, stealing the curds and Ghee from the closed houses of maids, Nanda's son, how can I accept what he did to my daughter frail!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்