விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெருவாதாள் வாய்வெருவி*  வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்* 
    மருவாளால் என் குடங்கால்*  வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்*  வண்டு ஆர் கொண்டல்-
    உருவாளன் வானவர்தம் உயிராளன்*  ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட- 
    திருவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்குடங்கால் மருவாள் - எனதுமடியில் பொருந்து கின்றிலள்;
வாள் நெடு கண் துயில் மறந்தாள் - வாள்போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்;
வண்டு - வண்டுபோலவும்
ஆர் கொண்டல் - பூர்ண மேகம்போலவும்
உரு ஆளன் - திருவுருவமுடையவனும்

விளக்க உரை

இப்போது அழகிய மணவாளன் விஷயமாக ப்ராவண்யம் செல்லாநிற்க, திருவேங்கடமலையின் ப்ரஸ்தாவத்துக்குக் காரணமில்லையே; “வேங்கடமே வேங்கடமே யென்கின்றாளால”; என்றன்றோ மூலமிருக்கிறது; இது திருவரங்கப் பதிகமேயன்றித் திருவேங்கடப்பதிகமன்றே; அப்படியிருக்க, “வேங்கடமே வேங்கடமே” யென்கைக்கு நிதானமேது? என்று சங்கை பிறக்கக்கூடும்; கேண்மின்:- மேலுலகத்திலுள்ள ஸ்ரீவைகுண்ட திவய்நகரமே இம்மண்ணுலகில் திருவரங்கமாகவும், அவ்விடத்துள்ள விரஜாநதியே திருக்காவேரியாகவும், பரவாஸுதேவனே ஸ்ரீரங்கநாதனாகவும் அவதரித்ததாக மஹாரிஷிகளும் நம் பூருவர்களும் சொல்லுவர்கள்; பரமபதநாதன் திருவரங்கத்திலே வந்து புகுவதற்காக அங்கு நின்றும் பயணமெடுத்துவிட்டு எழுந்தருளுமடைவிலே திருவேங்கடமலையிலே சிறிது இளைப்பாற நின்று, பின்பு திருவரங்கத்திலே வந்து சாய்ந்திருளினதாக நிர்வஹிப்பதொரு புடையுண்டு: திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் திவ்ய ப்ரபந்தத்தில் முதற் பாட்டில் “விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்” என்றார்

English Translation

"Venkatam, O! Venkatam O!" My daughter brazenly prates all day long. No more she's on my lop and her long eyes have lost their sleep as well. "Bees-humming hue-of-cloud Lord of celestials, their life and breath" Lord Sri, how can I accept what he did to my daughter frail!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்