விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல்இடம் முழுதினையும்* 
    பாங்கினால் கொண்ட பரம!நின் பணிந்து எழுவேன்*  எனக்கு அருள்புரியே,* 
    ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி*  வண்டு உழிதர*  மாஏறித்
    தீம் குயில் மிழற்றும் படப்பைத்*  திருவெள்ளறை நின்றானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓங்கு பிண்டியின் செம்மலர் - உயர்ந்து வளர்கின்ற அசோக மரத்தினுடைய சிவந்த புஷ்பங்களின் மேலே
வண்டு ஏறி உழிதர - வண்டுகள் ஏறி ஸஞ்சரிக்க,
தீம் குயில் மா ஏறி - மதுரஸ்வரம் உள்ள குயில்கள் மாமரங்களின் மேலேறிநின்று
மிழற்றும் - கூவுதல் செய்யப்பெற்ற
படப்பை - கொடித் தோட்டங்களை யுடைத்தான

விளக்க உரை

(ஓங்குபிண்டியின் இத்யாதி.) ‘பிண்டி’ என்று அசோகமரத்துக்குப் பெயர். ஆகாசாவதாசம் வெளியடையும்படி வளர்ந்த அசோகமரம் செக்கச்செவேலென்று பூத்த பூக்களினால் நிறைந்திருக்கின்றது; அப்புஷ்பங்களை வண்டுகள் பார்த்து ‘இவை மலர்களல்ல, நெருப்பாம்’ என மயங்கி அங்குச்செல்ல அஞ்சிச் சிலசமயங்களில் ஒதுங்கித் திரியும். (கீழ் முதற்பத்தில் (1-2-9) “தாதுமல்கிய பிண்டி விணடலர்கின்ற தழல்புரையெழில் நோக்கிப் பேதை வண்டுகள் எரியெனவெருவரு பிரிதிசென்றடை நெஞ்சே!” என்ற பாசுரமும் அவ்விடத்து உரையும் நோக்கத்தக்கது. அசோகமலர்களை அக்நியாக ப்ரமித்து அஞ்சி அப்பால் செல்லும் இயல்வினவான வண்டுகள் சில ஸமயங்களில் அந்த ப்ரமம்நீங்கி ‘இவை மலர்களே’ என்று துணிந்து அவற்றிலே மதுவுண்ணச்செல்வது முண்டாகையாலே, அப்படி அவை மதுவுண்ண அசோக மலர்களில் ஏறியிருப்பதைக் கண்டு அருகே மாமரங்களிலுள்ள குயில்கள் ‘அந்தோ! இவ்வண்டுகள் நெருப்பிலே அகப்பட்டனவே!’ என்று பரிதாபந் தோற்ற அநக்ஷராஸமாகக் கூப்பிடுகின்றனபோலும். இப்படிப்பட்ட சோலைகளினாற் சூழப்பெற்றது திருவெள்ளறை.

English Translation

O Lord residing in Tiruvellarai, where bees hover on the red blossoms of the Asoka tree and cuckoos go over to the mango tree to sing sweetly! Then in the yore you went to Mabal's sacrifice and took the whole Universe in two strides! Pray grace me that I may worship you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்