விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலை வாழ்*  பிணையோடு அணையும்*  திருநீர் 
    மலை வாழ் எந்தை*  மருவும் ஊர்போல்*
    இலை தாழ் தெங்கின்*  மேல்நின்று*  இளநீர்க்
    குலை தாழ் கிடங்கின்*  கூடலூரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலை - ஆண்மான்கள்
பிணையோடு - பெண்மான்களோடு
அணை வாழும் - சேர்ந்து வாழும்படியான
திருநீர்மலை - திருநீர்மலையிலே
வாழ் - வாழ்கின்ற

விளக்க உரை

(இலைதாழ் இத்யாதி.) படர்ந்த இலைகளையுடைய தென்னைமரங்கள் குளங்களின் கரையிலே நிற்கும்; அவற்றிலுண்டான இளநீர்க் குலைகளானவை தாழ்ந்து நிற்கிற போது, குளங்களை இளநீராலே நிறைத்து இலைகளாலே மறைத்துவைத்தாற்போலே யிருக்குமாயிற்று. நின்ற + இளநீர், நின்றிளநீர்; தொகுத்தல்.

English Translation

The Lord who resides in Tirunirmalai with deer-pairs resting in company has come to reside in Kudolur where coconut bunches hang low on trees, over leaves of the Betel Creeper that surrounds it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்