விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங் கமலப் போதகத்தில்*  அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்* 
    செங் கமல முகம் வியர்ப்ப*  தீமை செய்து இம் முற்றத்தூடே*
    அங்கம் எல்லாம் புழுதியாக*  அளைய வேண்டா அம்ம! விம்ம* 
    அங்கு அமரர்க்கு அமுது அளித்த*  அமரர் கோவே! முலை உணாயே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அங்கு - அக்காலத்திலே;
விம்ம - (அவர்கள் வயிறு) நிரம்பும்படி;
அமரர்க்கு - (அந்த) தேவர்களுக்கு;
அமுது அளித்த - (க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த;
அமரர் கோவே - தேவாதிராஜனே;
அம் கமலம் போது அகத்தில் - அழகிய தாமரைப் பூவினுள்ளே;

விளக்க உரை

புழுதியளையாமல் முலையுண்ண வாராய் என்கிறாள். செந்தாமரை போன்ற திருமுகத்திலே வியர்வைத் துளிகள் அரும்புதற்கு ஒரு அபூதோபமை கூறுகின்றார். முதலடியில் - தாமரைமலரில் முத்துக்கள் சிந்தியிருந்தாலொக்குமென்கிறார்.

English Translation

My Master! Do not play mischief and go all over the yard picking up dust, with sweat forming over your flower-like face like pearls of dew on a fresh lotus flower. O king of gods, there in the Milky

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்