விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேவா அரக்கர் தென் இலங்கை*  வேந்தன் வீயச் சரம் துரந்து* 
    மாவாய் பிளந்து மல் அடர்த்து*  மருதம் சாய்த்த மாலது இடம்*
    காஆர் தெங்கின் பழம் வீழ*  கயல்கள் பாய குருகு இரியும்* 
    பூஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மேவா அரக்கர் தென் இலங்கை வேந்தன் வீய - பகையே இயற்கையான ராக்ஷஸர்கள் நிறைந்த தென்னிலங்காபுரிக்கு அரசனான இராவணன் முடியும்படி
சரம் துரந்த - அம்புகளைப் பிரயோகித்தவனும்
மா வாய் பிளந்து - குதிரை வடிவுடன் வந்த கேசியென்னு மசுரனுடைய வாயைக் கீண்டொழித்தவனும்
மல் அடர்த்து - மல்லர்களை வென்றவனும்
மருதம் சாய்த்த - இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவனுமான
மாலது - எம்பெருமானுடைய

விளக்க உரை

அவ்விடத்து வயல்களில் நிகழும் அதிசயத்தைக் கூறுவன பின்னடிகள். செறிந்த சோலைகளில் தேங்காய்கள் இற்று முறிந்து வீழ்கின்றன; அதனைக்கண்ட மீன்கள் ‘நம்மைக் கொள்ளை கொள்வதற்கு ஏதோவொரு வலிய பறவை நீரிற் குதித்தது போலும்’ என் றெண்ணித் துள்ளிச் சிதறுகின்றன; அதனைக்கண்ட குருகுகள் ‘இக்கயல்கள் நம்மையும் கபளீகரிக்க வருகின்றன கொல்’ எனமருண்டு சிதறியோடுகின்றனவாம். தமக்கு இரையாகத்தக்க கயல்களினின்று குருகுகள் அஞ்சுகின்றனவாகச் சொன்னவிதனால் அக்கயல்களின் வலிமை கூறப்பட்டதாம். தேங்காய்கள் விழுந்ததைக் கண்டே குருகுகளும் இரிந்தனவாகக் கொள்ளுதலுமாம்.

English Translation

He fired arrows on the unrelenting Rakshasa king and felled his heads; He ripped the horse's Jaws, killed the wrestlers and felled the Marudu trees, He resides amid flowering water tanks and fields, -where ripe coconuts fall from trees, fish jump out startled, and water birds fly away disturbed,-in Pullam-Budangudi, yes, always!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்