விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உற*  கடல் அரக்கர் தம் சேனை* 
    கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த*  கோல வில் இராமன் தன் கோயில்*
    ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்*  ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி* 
    சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்*  திருவெள்ளியங்குடி அதுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கூற்று இடை செல்ல - யமனிடம் சென்று சேரும்படியாகவும்
கொடு கணை துரந்த - கொடிய அம்புகளைப் பிரயோகித்த
கோலம் வில் இராமன் தன் கோயில் - அழகிய வில்லையுடைய இராமபிரானுடைய ஸந்நிதி (எதுவென்றால்);
ஊற்று இடை நின்ற வாழையின் - நீரூற்று உள்ள நிலங்களிலே முளைத்திருக்கிற வாழை மரங்களினுடைய
ஊழ்ந்து வீழ்ந்தன கனிகள் - (கனியப்பழுத்து) இற்று உதிர்ந்த பழங்களை

விளக்க உரை

பூளைப்பூக்கள் என்று சில காட்டுப்பூக்களுண்டு; காற்றடித்தவாறே அவை பறந்து உருமாய்ந்து இன்னவிடம் போயினவென்று தெரியாதபடி போய்விடும்; அவ்விதமாகவே இலங்கை அரக்கர்களின் சேனைகளெல்லாம் உருமாய்ந்து ஒழியும்படியாகக் கொடிய அம்புகளைப் பிரயோகித்தான் இராமபிரான் - என்பன முன்னடிகள் : அப்படிப்பட்ட பராக்ரமம் வாய்ந்த கோதண்டபாணிப் பெருமானது திருக்கோயில் திருவெள்ளியங்குடி. நீர்நிலங்களிலே பயிர்செய்யப்பட்டுச் செழித்து வளர்ந்துள்ள வாழைகளானவை முற்றிப்பழுக்கும்; அந்தப் பழங்கள் இற்றுக் கீழே விழும். மீன்கள் அவற்றை மேல்விழுந்து புஜித்துச் செருக்கித் துள்ளி விளையாடப் பெற்ற வயல்கள் சூழ்ந்ததாம் இத்தலம். கரந்தன= ‘கரந்தாலன்ன’ என்பதன் தொகுத்தல். கரத்தல் - உருத்தெரியாது போதல். அரந்தை – துன்பம். ஊழ்த்தல் - உதிர்தல்.

English Translation

Like the fine Pulai flowers blown by the wind, the island king's Rakshasa army was dispersed, routed, and sent to the jaws of death by the hot arrows rained by the beautiful archer Rama who resides in the temple,-amid lush green plantations, of banana, where the fruit ripens and drops, the Kayal fish grab and eat it, then dance in the paddy fields –of Tiruvelliyangudi, that is it!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்