விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சொல்லாது ஒழியகில்லேன்*  அறிந்த சொல்லில்*  நும் அடியார் 
    எல்லாரோடும் ஒக்க*  எண்ணியிருந்தீர் அடியேனை*
    நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்*  நமக்கு இவ் உலகத்தில்* 
    எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்*  இந்தளூரீரே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சொல்லாது ஒழிய கில்லேன் - (அடியேன் சொல்ல நினைத்ததைச்) சொல்லாதிருக்க முடியவில்லை;
அறிந்த சொல்லில் - நான் அறிந்தவற்றைச் சொல்லத் தொடங்கினால்
(இதனைச் சொல்லுகிறேன் கேளீர்;) - இவ்வுலக நடை யெல்லாமும் தெரிந்துகொண்டிருக்கிறீர்;
அடியேனை - (உம்மைப் பிரிந்து தரிக்க மாட்டாத) அடியேனை
நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் - உம்முடைய மற்ற அடியவர்கள் எல்லாரோடும் ஸமமாக நினைத்திருக்கிறீர்;

விளக்க உரை

மீண்டு மீண்டும் நிர்ப்பந்திக்கின்றீரே; ஆழ்வீர்! இஃது உமக்குத்தகாது என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வார் விண்ணப்பஞ் செய்கிறார். இந்தளூரீர்! அடியேன் விண்ணப்பஞ் செய்ய நினைத்த விஷயத்தைக் கூசாமல் விண்ணப்பஞ் செய்துவிடுகிறேன்; சேஷபூதன் சேஷியை நிர்ப்பந்திக்கலாகாது என்று முறையறிந்து இருக்கமாட்டுகின்றிலேன்; ஸர்வஜ்ஞரான உமக்கும் தெரியாத விஷயம் ஒன்றுண்டு என்று அடியேன் நினைத்திருக்கிறேன். உமக்குப் பல்லாயிரம் பேர்கள் அடியாருண்டு. ‘மற்ற அடியார்களெல்லாரையும்போலே இக்கலியனும் ஓரடியான்’ என்று நீர் நினைத்திருக்கின்றீரத்தனையல்லாது எனக்குள்ள வாசியைச் சிறிதும் அறிகின்றிவீர். “ஊர்த்வம் மாஸாந்நஜீவிஷ்யே” (ஒரு மாதம் வரையில் உயிர்தரித்திருப்பேன்) என்று சொன்ன அசோகவனிகைப் பிராட்டியையும் என்னையும் ஒருதட்டாக நினைத்திருக்கிறீரே யொழிய ‘ஒரு நொடிப்பொழுதும் நம்முடைய பிரிவைப் பொறுக்கமாட்டாத ஸுகுமார ஸ்வபாலன் இவன்’ என்று என்னுடைய வாசியை அறிந்திலீர் என்கிறார்.

English Translation

O Lord of indolur I cannot refrain from saying it, let me say what I fee; you only think of me as yet another devotee, you know who is good and who is bad, you know everything about this world. You only don't know how to shower your grace on me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்