விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆசை வழுவாது ஏத்தும்*  எமக்கு இங்கு இழுக்காய்த்து* அடியோர்க்கு 
    தேசம் அறிய*  உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*
    காசின் ஒளியில் திகழும் வண்ணம்*  காட்டீர் எம் பெருமான்* 
    வாசி வல்லீர்! இந்தளூரீர்!*  வாழ்ந்தே போம் நீரே!             

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இங்கு ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு - இந்நிலத்தில் ஆசைகுன்றாமல் துதிக்கின்ற எமக்கு
இழுக்கு ஆய்த்து - (இத்துதிசெய்தல்) அவத்யமாய் வந்து முடிந்தது;
தேசம் அறிய - உலகமெல்லாம் அறியும்படியாக
உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு அடியோர்க்கு - உமக்கே தொண்டராய்த் திரிகின்ற எமக்கு

விளக்க உரை

இந்தளூரீரே! ஊலகமறிய உமக்கே அநந்யார்ஹராயிருக்கிற எங்களுக்குப் பொன்னொளியிற் காட்டிலும் மிகவிளங்காநின்றுள்ள வடிவழகைக் காட்டமாட்டேனென்கிறீரே; ‘பக்தாநாம்த்வம் ப்ரகாசஸே’ என்கிறபடியே எங்களுக்கென்றே கொண்டிருக்கிற திருமேனியை எமக்குக் காட்டாதேயிருப்பது என்னோ? (வாசிவல்லீர்) ‘மிகச்சிறந்த நமது திருமேனியை நித்யஸூரிகள் போல்வார் காணவேணு மத்தனையல்லது அற்பனான இவன் காணலாகாது’ என்று நீர் நினைக்கின்றீர்போலும், ஸர்வஸாதாரணமான திருமேனியை இன்னார்க்குத்தான் காட்டலாம், இன்னார்க்குக் காட்டலாகாது என்று ஒருவாசி யிட்டுக்கொள்ளலாமோ? (இந்தளூரீர்!) நித்யஸூரிகளுக்குக் காட்சிதரும் வடிவை நித்யஸம்ஸாரிகளுக்கும் ஸர்வஸ்வதானம் பண்ணுகைக்காகவன்றோ திருவிந்தளுரிலேவந்து நிற்கிறது. வாசியற முகங்கொடுக்க வந்து நிற்கிறவிடத்திலே வாசிவைக்கின்றீரே. (வாழ்ந்தே போம் நீரே.) உம்முடைய உடம்பு உம்மை ஆசைப்பட்டவர்களுக்காக ஏற்பட்டது என்று நினைத்திருந்தோம்; அப்படியன்றாகில், உம்முடம்பை நீரே கண்டுகொண்டு நீரே தொட்டுக்கொண்டு நீரே மோந்துகொண்டு நீரே கட்டிக்கொண்டு நீரே வாழ்ந்துபோம். “காசினொளியிற்றிகழும் வண்ணம்” என்றவிடத்து “சுட்டுரைத்த நன்பொன் உன்திருமேனியொளி யொவ்வாது” என்ற (3-1-2) திருவாய்மொழி அநுஸந்திக்கத்தக்கது.

English Translation

O Lord of Indalur! All the praise that we devotees offer whole heartedly has gone waste. The whole world knows that we serve you alone, and yet you do not show your brighter-that-gold-face. You know what is proper. May you proper!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்