விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட*  கள்ளச் சகடு கலக்கு அழிய* 
    பஞ்சி அன்ன மெல்லடியால்*  பாய்ந்த போது நொந்திடும் என்று*
    அஞ்சினேன் காண் அமரர் கோவே!*  ஆயர் கூட்டத்து அளவன்றாலோ* 
    கஞ்சனை உன் வஞ்சனையால்*  வலைப்படுத்தாய்! முலை உணாயே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமரர் கோவே - தேவர்களுக்குத் தலைவனே! (நீ);
கஞ்சன் தன்னால் -கம்ஸனாலே;
புணர்க்கப்பட்ட - (உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப்பட்ட;
கள்ளச்சகடு - க்ருத்ரிம சகடமானது;
கலக்கு அழிய - கட்டு (க்குலைந்து உருமாறி) அழிந்துபோம்படி;
 

விளக்க உரை

உரை:1

(அஞ்சினேன் இத்யாதி) “பெற்றவளுக்கன்றோ தெரியும் பிள்ளையினருமை” என்றபடி உன்னைப் பெற்றதாயான எனக்குத்தான் உன் அருமை தெரியுமாதலால் மற்றை இடையர் திரளின் அச்சமெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் நான் ‘உனக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ!’ என்று கொண்டுள்ள அச்சத்திற்கு ஒப்பாகாது என்றபடி. காண் - முன்னிலையசை; தேற்றப்பொருள் தரும். ஆல் - தேற்றம்; ஓ - இரக்கம். பஞ்சி - பஞ்சு; கடைப்போலி.

உரை:2

கம்சனால் உன்னைக் கொல்ல அனுப்பிய சகடாசுரன் கண்ணனை அழிக்க வந்தபோது, கண்ணன் தன் பஞ்சுபோன்ற திருவடிகளால் உதைத்தப் போது, உன் திருவடிகளுக்கு துன்பம் உண்டாகுமே என்று பயந்தேன். எல்லா இடையர்களின் பயத்தை விடவும் என் பயம் மிகவும் அதிகம். ஐயோ ! வஞ்சனை செய்த கஞ்சனை(கம்சனை) நீ உன் வஞ்சனையாலே தப்பிக்க முடியாதபடி அகப்படுத்திக் கொன்றாய். இப்போது முலைப்பால் அருந்தவா என்கிறாள் யசோதை.

English Translation

O King of eternals! You caught Kamsa with your tricks and killed him. The devilish cart incited by him broke to smithers when you smote it with your cotton soft feet. My fear that it may have hurt y

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்