விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மல்லை மா முந்நீர் அதர்பட*  மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை* 
    கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க*  ஓர் வாளி தொட்டானை* 
    செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மல்லை மாமுந்நீர் அதர்பட - செல்வம் மிக்க பெரிய கடலானது வழியாக அமையும்படி
மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை - மலைகளைக்கொண்டு அணைகட்டி திருவுள்ள முகந்தவனும்,
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க - (த்ரிகூடமென்னும்) மலையின் மேலே கட்டப்பட்ட அரணான மதிளை யுடைத்தான இலங்காபுரியானது சிதறிபொழியும்படி
ஓர் வாளி தொட்டனை - ஒரு அம்பை பிரயோகித்தவனுமான பெருமாணை
செல்வம் நால்மறையோர் - சதுர்வேதங்களைச் செல்வமாகவுடைய அந்தணர் வாழ்கிற
 
 

விளக்க உரை

கடல் ரத்னங்களுக்குப் பிறப்பிடமாதலால் ‘மல்லைமா முந்நீர்’ எனப்பட்டது. த்ரி கூடமென்னும் மலையின் சிகரத்திலே இலங்கைமாநகர் இயற்றப்பட்டதாதலால் ‘கல்லின் மீதியன்ற’ எனப்பட்டது. கல் - மலைக்கு ஆகுபெயர். கடி – அரண்.

English Translation

Building a bridge of rocks over foaming sea in the yore, fifty Lord who found his joy shot heavy arrows over the mighty walled city of the island-king Lanka. Learning-wealthy Vedic seers residing in Nangur, -Semponsei koyil is in their midst, seeing my precious Lord, with the lotus-Lakshmi, I have found my spiritual elevation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்