விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வார் ஆரும் இளங் கொங்கை*  மைதிலியை மணம் புணர்வான்* 
    கார் ஆர் திண் சிலை இறுத்த*  தனிக் காளை கருதும் இடம்*
    ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
    சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்*  திருத்தேவனார்தொகையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வார் ஆரும் இளகொங்கை மைதிலியை - கச்சையிட்டுத் தாங்க வேண்டும்படியான இளமுலைகளையுடைய ஸீதாபிராட்டியை
மணம் புணர்வான் - விவாஹம் செய்து கொள்வதற்காக
கார் ஆர் தின் சிலை இறுத்த - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை முறித்த
தனி காளை - விலக்ஷண யௌவநபுருஷன்
கருதும் இடம் - திருவள்ளம்பற்றின திவ்யதேசம் (எதுவென்றால்)

விளக்க உரை

“வாராளு மிளங்கொங்கை” என்றும் பாடமுண்டு. கச்சு அணிந்து ஆளவேண்டும் படியான இளமுலைகளையுடையாள் என்கை.

English Translation

The Lord who broke the great, heavy bow and married the tender corseted dame Maithili resides permanently at Nangur with bright Vedic seers abounding in knowledge-wealth amid the beautiful groves of Tiruttevanar Togai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்