விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வான்நாடும் மண்நாடும்*  மற்றுஉள்ள பல்உயிரும்*    
    தான்ஆய எம்பெருமான்*  தலைவன் அமர்ந்து உறையும்இடம்*
    ஆனாத பெருஞ்செல்வத்து*  அருமறையோர் நாங்கைதன்னுள்*
    தேன்ஆரும் மலர்ப்பொழில்சூழ்*  திருத்தேவனார்தொகையே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆனத - அழிவில்லாத
பெரு செல்வத்து - மிக்க ஐச்வரியத்தையுடையராய்
அருமறையோர் - அருமையான வேதங்களை ஓதினவர்களுமான அந்தணர் வாழ்கிற

விளக்க உரை

“பல்லுயிருந்தானாய வெம்பெருமான்” என்றவிடத்துக்குப் பெரியவாச்சான்பிள்ளை எடுத்துக்காட்டுகிற விசேஷோக்தி வருமாறு :- “தானும் குடும்பமுமாய்க் கலநெல் ஜீவிப்பானொருவனை ‘உனக்கென்ன வேணும்?’ என்றால், ‘எனக்குக் கலநெல்வேணும்’ என்னுமிறே தன்னபிமானத்துக்குள்ளே யடங்குகையாலே. அப்படியே, தானே இதுக்கெல்லாம் அபிமாநியாயிருக்கிற ஸர்வேச்வரன் - ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் தனக்கு ப்ரகாரமாய்ப் புறம்பு ஒருவரின்றிக்கே உபயவிபூதியும் தன்நிழலிலே யொதுங்கும்படியிருக்கையாலே தலைவனானவன் வந்து நித்யவாஸம் பண்ணுகிற தேசம்.” ஆனாத – ஆன்--பகுதி

English Translation

The celestial world, the Earth-world, the souls and all else, --our Lord and masters is all these. He resides at Nangur, with the Vedic seers, who command the abiding wealth of the Vedas, amid nectar-dripping fragrant groves in Tiruttevanar Togai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்