விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீமனத்தான் கஞ்சனது, வஞ்சனையில் திரியும்*  தேனுகனும் பூதனைதன், ஆர்உயிரும் செகுத்தான்* 
    காமனைத்தான் பயந்த, கருமேனிஉடைஅம்மான்*  கருதும்இடம் பொருதுபுனல், துறைதுறை முத்துஉந்தி*
    நாமனத்தால் மந்திரங்கள், நால்வேதம்*  ஐந்து வேள்வியோடு ஆறுஅங்கம், நவின்று கலை பயின்று*
    அங்குஆம்மனத்து மறையவர்கள், பயிலும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேனுகனும் பூதனைதன் உம் - தேநுகாஸூரனுடையவும் பூதனையினுடையவும்
ஆர்உயிர் செகுத் தான் - நற்சீவனை முடித்தவனும்
காமனை பயந்தகரு மேனி உடை அம்மான் - மன்மதனை புத்தரனாகப் படைத்தவனும் கரிய திருமேனியை யுடையவனுமான ஸர்வேச்வரன்
புனல் பொருது துறை துறை முத்து உந்தி - மானது அலையெறிந்து துறைகள்தோறும் முத்துக்களை தள்ளிக்கிடக்குமிடமாயும்

விளக்க உரை

English Translation

Then in the yore, the Lord destroyed the Asura Dhenuka and the ogress Putana, sent by the evil-intending Kamsa. He is the dark hued Lord, verily the love-god Kama's father. He resides permanently in Nangur where waves of the ocean lash out pearls on every shore, and where Vedic seers learn, recite and practice the Mantra-wisdom of the four Vedas, the five sacrifices, the six Angas, and the seven Svaras. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்