விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேப் பூண்ட*  சாடு சிதறித்*  திருடி நெய்க்கு 
    ஆப்பூண்டு*  நந்தன் மனைவி கடை தாம்பால்*
    சோப்பூண்டு துள்ளித்*  துடிக்கத் துடிக்க*  அன்று 
    ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிதறி - உருக்குலையும்படி உதைத்து;
நெய்க்கு - நெய்க்கு ஆசைப்பட்டு;
திருடி - களவுசெய்து;
ஆப்பூண்டு - (உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு;
 
 

விளக்க உரை

சாடு - ‘சகடம்’ என்ற வடசொல்லின் சிதைவு. ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால் சோப்பூண்டு - ‘என் மகன் மேல் வீண் பழிவிளைத்திடேல்மின்; களவுகண்டதுண்டாகில் கையும்பிடியுமாய்ப் பிடித்துக் கொணருங்கள்’ என்று சொல்லிய தாயான தன்முன்பே ஆய்ச்சிமார் கண்ணனைக் கொண்டியோடே கண்டுபிடித்துக் கொணர அதுகண்ட யசோதை ‘நான் பிள்ளை பெற்று வளர்க்கிறது மிகவு மழகியதாயிருந்தது! ‘ என்று சொல்லித் தன்னைத்தானே மோதிக்கொண்டு அவர்கள் முன்றே தன் வயிற்றெரிச்சலெல்லாந் தோன்றும் படி அடிக்க அடியுண்டு என்றபடி. ஆப்பூண்டு சோப்பூண்டு ஆப்பூண்டான் - ‘ஆப்பூண்டு’ ‘சோப்புண்டு’ ஆப்பூண்டான் என்பவற்றின் நீட்டல் விகாரம்.

English Translation

Once he was caught stealing butter; Nanda’s wife tied up with a churning rope and beat him as he writhed in pain. He smote a loaded bullock cart to smithers. He comes as a child and shows ‘Fear!’ to

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்