விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிலை ஆளா நின் வணங்க*  வேண்டாயே ஆகிலும் என்* 
    முலை ஆள ஒருநாள்*  உன் அகலத்தால் ஆளாயே*
    சிலையாளா! மரம் எய்த திறல் ஆளா!*  திருமெய்யமலையாளா*
    நீஆள வளை ஆள மாட்டோமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒரு நாள் - ஒருநாளாகிலும்
என் முலை ஆள - எனது முலைகள் ஆட்செய்யும்படியாக
உன் அகலத்தால் ஆளாய் - உனது திருமார்பினால் அணைத்தருளுவேணும்;
நீ ஆள  - உன்னுடைய ஆளுகையில் உட்பட்டிருக்குமளவில்
வளை ஆன மாட்டோமே - கையில் வளை தாங்காமல் துள்ளப்படவேண்டியதேயன்றோ எமக்குக் கதி.

விளக்க உரை

ஸத்தையுள்ள வரைக்கும் உன் திருவடிகளுக்கு ஆளாயிருக்க வேண்டுவதே கடமை; ஆனாலும் இப்படி நீ திருவுள்ளம் பற்றினாலன்றி இந்த நித்ய கைங்கரியம் கிடைக்கமாட்டாதன்றோ; என்னை நித்ய கைங்கரியத்திற்கு ஆளாக்கிக் கொள்ளத் திருவுள்ளமில்லை யெனினும் ஒரு நாளாகிலும் உன்திருமேனியை எனக்குத் தந்தாலாகாதோ? இதுவும் நீ செய்யமாட்டாகில், ஆர்த்தர்களை ரக்ஷிப்பதற்காகக்; கையிலே வில்பிடித்துக் கொண்டிருக்கிறேனென்று நீ இருப்பது ஏதுக்காக? ஸூக்ரிவனுக்கு நம்பிக்கை யுண்டாவதற்காக மராமரங்க ளேயுழைந்துளைத்த மிடுக்கையுடையவனென்று உன்னைப் புகழ்வது ஏதுக்காக? திருமெய்யத்திலே ஸத்யேசனென்று பெயர்படைத்திருப்பது ஏதுக்காக? நான் ஒருத்தி வாழும்படி காரியஞ் செய்யமாட்டாத வுனக்கு இப்புகழெல்லாம் பொருந்துமோ என்கிறாள். நீ ஆள வளையாள மாட்டோமே-உன்னுடைய ஆளுகையிலே அடங்கியிருப்பார்க்கு) க்கையில் வளை தங்கியிருக்க ப்ராப்தியுண்டோ? என்கை.விட்டுப் பிரியாமல் கூடியிருக்குங் காலத்திலே ஸந்தோஷ மிகுதியினால் உடம்பு பூரித்து வளை வெடித்துப்போம். பிரிந்த காலத்திலோ உடலிளைத்து வளை சுடனறொழியும்: ஆனபின்பு ஒருபோதும் வளை தங்கியிருக்க ப்ராப்தியில்லை என்னலாம்.

English Translation

O, Bow wielder, strong tree-piercing archer! O Tirumeyyam-recliner! Even if you decide to spurn my devoted love for you, come one day and rub your wide chest against my risen breasts; no more will our lost bangles concern us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்