விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிணிஅவிழு நறுநீல*  மலர் கிழிய பெடையோடும்*   
    அணிமலர்மேல் மதுநுகரும்*  அறுகால சிறு வண்டே!* 
    மணிகழுநீர் மருங்குஅலரும்*  வயல் ஆலி மணவாளன்*   
    பணிஅறியேன் நீ சென்று*  என் பயலை நோய் உரையாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மணி கெழுநீர்மருங்கு அலரும் வயல் - அழகிய செங்கழுநீர்ப் பூக்கள் நாற்பக்கத்திலும் விகளிக்கப்பெற்ற கழனிகளையுடைய
ஆலி - திருவாலியிலே யெழுந்தருளியிருக்கிற
மணவாளன் பணி - மணவாளப்பிள்ளை போன்ற எம்பெருமானுடைய செய்தியை
அறியேன் - இன்னதென்று நானறிகின்றேனில்லை;
என் பயலே நோய் உரையாய் - என்னுடம்பு வேறுபட்டிருந்தலாகிற நோயை சொல்லுவாயாக.

விளக்க உரை

-இப்பாசுரமும் வண்டைத் தூதுவிடுவதாம், மலரத் தொடங்கின நீலமலரிலே குடும்பத் தோடு சென்றழிந்த மதுபானம் பண்ணாநிற்கிற வண்டே! வயலாகி மணவாளன் என்னோடு கலந்து பிரிந்துபோனது முதலாக அவன் நினைத்திருப்பது இன்னதென்று தெரியவில்லை; என்னை மறங்திட்டானோ; அன்றி என்னையே நினைத்துக்கொண்டு கிடக்கிறனோ;இங்கே வருதாக இருக்கிறனோ; என்னை அங்கு வரவழைத்துக் கொள்வதாக இருக்கிறனோ-அன்றி நானொருத்தி இருக்கிறேனென்பதைக் கணிசியாமிலே கிடக்கிறானோ; இப்போது அவன் செய்வதும் செய்ய நினைத்திருப்பது மொன்றும் எனக்குத் தெரியவில்லை; என்னைப் பிரிந்து அவன் வருத்தமற்றிருப்பது போலவே நானும் அவனைப் பிரிந்து வருத்தமற்றிருக்கிறேனாக அப்பெருமான் நினைத்து ஆறியிருக்கவுங்கூடும்; நான் இங்ஙனே நோவுபடுகிறேனென்பது தெரிந்தால் இங்குவந்து சேரத் தாமஸிக்கமாட்டானாதலால், நீ அங்குச் சென்று நான் படுகிறநோயைத் தெரிவிக்க வேணுமென்கிறாள்.

English Translation

Six-legged O Bumble-bees with your spouses enjoying drink, In the lilies blossoming blue, almost shaking off the petals! Go to the groom of Vayalali, living amid lotus thickets. I do not know what he intends, tell him of my paling disease.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்