விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சங்கு தங்கு தடங் கடல் கடல்*  மல்லையுள் கிடந்தாய்*
    அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்*  இனிப் போயினால் அறையோ!*
    கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி*  இன் இள வண்டு போய்*
    இளந்தெங்கின் தாது அளையும்*  திருவாலி அம்மானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இளதெங்கின் நாது அளையும் - இளைய தென்னை மரங்களின் பாளைகளிலே அளையப்பெற்றசங்கு தங்கு தட,
கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் - சங்குகள் தங்கிய பெரிய திருப்பாற்கடலிலும் திருக்கடன் மல்லையிலும் (முன்பு) பள்ளி கொண்டிருந்தாய்;
இங்கு அருள் புரிந்து என்னுள் புகுந்தாய் - இப்போது கருணைகூர்ந்து என்னெஞ்சிலே பிரவேசித்தாய்;
இனி போயினால் அறையோ - இனி நீயே விட்டுப்போக நினைத்தாயாகில் அறையோவறை

விளக்க உரை

“சங்கு தங்கு தடங்கடல்” என்பதைக் கடன்மல்லைக்கு விசேஷணமாக்கியு முரைக்கலாம்; சங்குகள் தங்குகிற கடற்கரையிலேயிருக்கிற திருக்கடன்மல்லைத் திருப்பதியிலே என்றபடியாம். அர்ச்சாவதாரங்களில் எழுந்தருளியிருப்பதும் அன்பருடைய உள்ளத்திலே புகுருகைக்கு ஸாதநமாகவென்க. பரமபோக்யமான திருப்பதிகள் பலவுமிருக்க, அவற்றைவிட்டு நிர்ஹேதுக க்ருபையாலே ஸர்னெஞ்சிலே வந்து புகுந்தாய்; இனி இவ்விடம்விட்டு நீ போவதென்றால் அது உன்னாலாகாது; போக முடியுனானால் புறப்பட்டுப்பார்; என்னுடைய வார்த்தை மெய்யாகிறதோ, உன்னுடைய எண்ணம் நிறைவேறுகிறதோ, பார்ப்போமென்கிறார் முன்னடிகளில். ***- இனிப்போயினால் அறையோ = அறையோ என்பது தோற்றவர் முன்னே ஜயித்தவர் சொல்லும் வார்த்தைக்குறிப்பு. “ அறையோவென நின்ற திருங்கருங்கடல்” என்றார் நம்மாழ்வாரும் திருவிருத்தத்தில். “இனிப்போயினா லறையோ” என்னுமிவ்விடத்தில் வெற்றி தோல்விகளொன்று மில்லையே பென்னில்; எம்பெருமானே ! நீ இவ்விடம்விட்டுத் பேர முடியாது; எப்படியாவது அகன்று போய்விட வேணுமென்று நீ முயன்றாலுல் உன் முயற்சி தோற்றுப்போய் என் வார்த்தையே வெற்றிபெற்றதாகும் என்பதாகக்கொள்க. நீ இங்கே வந்து புகுந்ததற்குக் காரணமான பேரருள் மாறினாலன்றே இவ்விருப்பு மாறப்போகிறது; அருளும் மாறது, இவ்விருப்பும் மாறாது என்றவாறு.

English Translation

O, Lord of beautiful Tiruvali, where the sweetly humming bees sip the nectar of the fragrant Senbakam and jasmine flowers, then smear themselves with pollen from the tender coconut fronds! Lord who reclines in the deep ocean and in Kadal Mallai! Today you have entered my heart with grace. Now try leaving me, I challenge!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்