விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீலத்தடவரை*  மாமணி நிகழக் கிடந்ததுபோல்*
    அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்*  அடியேன் மனத்து இருந்தாய்*
    சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட*  மழை முகில் போன்று எழுந்து*
    எங்கும் ஆலைப் புகை கமழும்*  அணி ஆலி அம்மானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சோலைத்தலை மாமயில் கணம் நடம் ஆட - சோலையிலே அழகிய மயில்களின் கூட்டமானது (களித்துக்) கூத்தாடும்படியாக
ஆலை புகை மழைமுகில் போன்று எங்கும் எழுந்து கமழும் - கருப்பஞ்சாறு அட்டபுகையானது காளமேகம்போலே எங்குங் கிளர்ந்து பரவி பரிமளிக்கப்பெற்ற
நீலம் தடவரை மாமணி நிகழ கிடந்தது போல் - நீலநிறமுள்ள பெரிய வொரு மலையானது (தன்மேல்) ஒரு நீலரத்னம் விளங்கப்பெற்றுப் படுத்திருப்பது போன்று
வேலைத்தலை அரவு அணை கிடந்தாய் - திருப்பாற்கடலிலே சேஷசயனத்திலே (கௌஸ்துப மணி விளங்கப்) பள்ளி கொண்டிருந்தாய் முன்பு;

விளக்க உரை

“அரவணை வேலைத்தலைக் கிடந்தாய் அடியேன் மனத்திருந்தாய்” என்ற சொற்சேர்த்தியால் - அடியேனுடைய மனத்தில் ஸமயம் பார்த்து வந்து சேர்வதற்காகவே நீ திருப்பாற்கடலில் உபாய சிந்தனை பண்ணிக்கொண்டு கிடந்தாய் என்ற கருத்து விளங்கும். நீலநிறத்ததொரு மலையின்மேல் மாமணிவிளங்குவது போலத் திருப்பாற்கடலில் அரனணைமேற் கிடந்தாய் என்றவிதனில், நீலமலையின் ஸ்தாநத்திலே எம்பெருமானையும் மாமணியின் ஸ்தாநகரத்திலே ஸ்ரீகௌஸ்துப மணியையும் உபமேயமாகக்திலே கொள்ளவேணும். ஆகவே “அரவனை வேலைத்தலை” என்ற வாக்கியத்திற்கு உபமேயகோடியில் அந்வயமில்லை; அந்வயம் வேணுமென்னில்; எம்பெருமானுடைய கரிய திருமேனியின் நிழலீட்டாலே பாற்கடலும் பாம்பனையும் நீலநிறம் பெற்றன வென்றுகொண்டு, பாற்கடற்பாம்பமையை நீலத்தடவரைக்கு உபமேயமாகவும் எம்பெருமானை மாமணிக்கு உபமேயமாகவும் கொள்ளலாம்.

English Translation

O, Lord of beautiful Tiruvali! The smoke from the sugarcane bagasse rises like dark rain clouds over fragrant groves where peacocks dance in big numbers. You recline in the deep ocean on a serpent bed like a bright gem on a dark mountain. Today you have entered my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்