விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு* 
    ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*  அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*
    கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*  குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்* 
    பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*  பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குன்றா ஒலி மாலை ஓர்ஒன்பதோடு ஒன்றும் வல்லார்தாம் - குறையாத ஓசையை யுடைத்தான சொல்மாலையாகிய் இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்,
பார்ஆர்உலகம் அளந்தான் அடி கீழ் - பூமியையும் ஸ்வர்க்காதிலோகங்களையும் அளந்தவனான பெருமானுடைய திருவடிவாரத்திலே
பல காலம் நிற்கும்படி வாழ்வர் - நெடுங்காலம் அடிமைசெய்து நிற்கும்படி வாழப் பெறுவர்.

விளக்க உரை

English Translation

Kalikanri with arms like the dark rain-could, - which always does good to the ocean-girdled Earth, -has sung this garland of songs, to the delight of devotees with boundless love for the Lord who resides in Tillai Tiruchitrakudam amid beautiful groves. Those who master it will live on this Earth for long, as devotees of the Lord who measured the Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்