விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செம்பொன்இலங்கு வலங்கைவாளி *  திண்சிலை தண்டொடு சங்கம்ஒள்வாள்* 
    உம்பர்இருசுடர்ஆழியோடு*  கேடகம் ஒண்மலர் பற்றி எற்றே* 
    வெம்பு சினத்து அடல் வேழம்வீழ*  வெண்மருப்புஒன்று பறித்து*
    இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே . 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வலம் கை - வலத்திருக்கைpயலே
இலங்கு - விளங்குகின்ற
செம் பொன் - பசும்பொன்னாற் செய்யப்பட்ட
வாளி - அம்புகளையும்
திண் சிலை - திண்ணிதான சார்ங்க வில்லையும்

விளக்க உரை

அஷ்டபுஜனாகையாலே எட்டுத் திருக்கைகளிலும் எட்டு வஸ்துக்களையும் தரித்துக் கொண்டு வந்தமை சொல்லுகிறது முன்னடிகளில். 1. வாளி. 2. சிலை. 3. தண்டு. 4.சங்கம் 5. வாள். 6. ஆழி. 7.கேடகம் . 8.மலர் என்பன. கேடகம் எனினும் கெடயம் எனினும் கடகம் எனினும் ஒக்கும். மலர் என்பது ஆயதமன்றாகிலும் அழகுக்குடலாக ஏந்தினதாம். மன்மதன் மலர்களை ஆயதமாகவுடையனாதலால் மலர்க்கு ஆயதகோடியிலும் அந்வயமுண்டென்னலாம். எற்றே !-- இது எத்தன்மைத்து! என வியந்து கூறுவது. அன்று கம்ஸனுடைய அரண்மனை வாசலிற் புகும்போது தன்மேற் சீறிவந்த குவலயாபீடமென்னும் மதயானையின் கொம்பை முறித்து விலஷணமான வடிவழகு தோன்ற நின்றாப்போலே வந்து நிற்கிறாரே, இவர் ஆர்கொல்! என்ன, அட்டபுயகரத்தேன் என்றார்.

English Translation

Oh, how he came! Holding a golden bow, strong arrows, mace, conch, dagger and a radiant discus, and holding a flower as well, he looked like the cloud-hued Lord who plucked the tusk of the mighty rutted elephant. Who could this be, I wondered. “ I am the Lord of Attabuyakaram!”, he said.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்