விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்* 
    குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்*  கோல நல் மலர் குழற்கு அணியாள்*
    வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த*  மால் என்னும் மால் இன மொழியாள்* 
    இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துளம்படு முறுவல் - மாதுளம் விரைபோன்ற பற்களினின்றும் உண்டாகின்ற புன்சிரிப்பை
தோழியர்க்கு - தன் தோழிமார்களை நோக்கி
அருளாள் - அருள்கின்றாளில்லை;
துணை முலை - சேர்த்தியழகுடைய முலைகளை

விளக்க உரை

இப்பாட்டால் ஆழ்வார் தாம் சொல்லிக்கொள்வதாவது:- பிரானே! இவ்வுலகில் என்னோடுகூட ஸஜாதீயர்களாயுள்ள மனிசரீடத்தில் எனக்கு நேசமுண்டாவதில்லை; அவர்களோடு உல்லாஸமாகப் பேசுவதற்கு விருப்பமுண்டாவதேயில்லை; தேஹத்தையே பேணித்திரிகின்ற பிராகிருதர்களோடு ஒப்புடையேனல்லேன்; ஊர்வம்புகளைப் பிதற்றிப் போதுபோக்குவாரைப் போலன்றியே எப்போதும் உனது திவ்யசேஷ்டிகளையே வாய்வெருவிக் கொண்டிருக்கிறேன்; என்னுடைய பேச்சுக்களை நீ ஆராய்ந்தால் நான் உன்பக்கல் கொண்டுள்ள வியாமோஹம் நன்கு புலப்படும்; என்வடிவைக் கண்டாயாகில் நான் உனது பிரிவை ஒருநொடிப்பொழுதும் ஆற்றகில்லேனென்பது விளங்கும்; இப்படிப்பட்ட என்னை நீ அபேஷிகிறாயோ, உபேஷிக்கிறாயே? சொல்லாய் பெருமானே! என்றாராயிற்று.

English Translation

Her pomegranate smile face flashes for her friends no more, no more does she apply Sandal her twin breasts. Her lake-grown-lotus eyes whiten without collyrium, no more does she coiffure her dark hair. “He did take the wealthy ocean and the Earth in yore”, she sings in her ever-rising madness. Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்