விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை*  செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
    நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்*  ஆகிலும் ஆசைவிடாளால்*
    குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு*  நின்தாள் நயந்திருந்த இவளை* 
    உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அரிவை - நித்ய யௌவனமுடையளாய்
செழு கடல் அமுதினில் பிறந்த - செழுமை தங்கிய கடலில் அமுதத்தோடு கூடப் பிறந்தவளான
அவளும் - அந்த பெரியபிராட்டியாரும்
நின் ஆகத்து - உனது திருமார்பிலே
இருப்பதும் - எழுந்தருளியிருப்பதை

விளக்க உரை

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார் திருவிடந்தைப் பெருமானிடத்திலே தன் மகள் காதல்கொண்டு இருக்கிறபடியையும், காதலின்படியே அநுபவம் கைகூடாமையாலே பலவகை விகாரங்களை அடைந்திருக்கிறபடியையும் ஒவ்வொரு பாட்டில் ஒவ்வொரு வகையாகப்பேசி ‘இப்படிப்பட்ட இப்பெண்பிள்ளை விஷயத்தில் நீ செய்ய நினைத்திருப்பது என்னே பிரானே!’ என்று கேட்பதாகச் செல்லுகிறது. உண்மையில், ஆழ்வாரைக்காட்டிலும் வேறுபட்ட ‘தாய்’ என்பவளொருத்தி இல்லாமையாலே ஆழ்வார் தாமே தம்முடைய காதலின் கிளர்த்தியை அந்யாபதேசத்தாலே பேசி ‘இப்படிப்பட்ட ப்ராவண்யமுடைய என்விஷயத்திலே உபேiக்ஷசெய்திடத் திருவுள்ளமோ! அன்றி அங்கீகரித்துக்கொள்ளவே திருவுள்ளமோ? இரண்டிலொன்றைச் சோதிவாய்திறந்து அருளிச் செய்யவேணும்’ என்று கேட்கிறாராயிருக்கிறது.

English Translation

Shining brightly like the Moon, beaming-face’d Lakshmi Dame born out of the ocean during churning Resides on your dainty chest; knowing this in full measure, O, my daughter doesn’t give up pining. Cool-as-the-lotus eyes, setting on a chiseled face, --she has sought your feet as her refuge. Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்